இங்கிலாந்தில் 'The Hundred' லீக்; ஏலத்தில் புறக்கணிக்கப்பட்ட பாகிஸ்தான் வீரர்கள்; ஃபர்ஹான் சொல்வது என்ன..? - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 'The Hundred' கிரிக்கெட் தொடருக்கான வீரர்களுக்கான ஏலம் வரும் மார்ச் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்திய ஐபிஎல் (IPL) உரிமையாளர்களுக்குச் சொந்தமான நான்கு அணிகள், இந்த தொடருக்கு பாகிஸ்தான் வீரர்களை ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.

இதில், மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ், எம்ஐ லண்டன், சதர்ன் பிரேவ் மற்றும் சன்ரைசர்ஸ் லீட்ஸ் ஆகிய நான்கு அணிகளும் இந்திய உரிமையாளர்களால் நிர்வகிக்கப்படுகின்றன.குறித்த அணிகள் பாகிஸ்தான் வீரர்களைத் தவிர்க்க முடிவு செய்துள்ளதாக பிரித்தானிய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன.

இது குறித்து பாகிஸ்தான் தொடக்க வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் கூறுகையில்,' எந்த அணி எங்களைத் தேர்வு செய்யும் அல்லது செய்யாது என்பது எங்கள் கையில் இல்லை. அது குறித்து முடிவெடுப்பது எங்கள் அதிகாரம் அல்ல. எங்கு எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறதோ, எங்களை எடுக்க யார் ஆர்வம் காட்டுகிறார்களோ, அந்த லீக்கில் விளையாட நாங்கள் தயாராக இருக்கிறோம்.' என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், 'தி ஹன்ட்ரட்' உலகின் மிகச்சிறந்த லீக்குகளில் ஒன்று. இந்த லீக் தொடரில் ஒவ்வொரு வீரரும் விளையாட விரும்புவார்கள். எனவே, நல்லதே நடக்கும் என்று நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த 2008 மும்பை தாக்குதலுக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதேபோல் தென் ஆப்பிரிக்காவின் SA20 மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் ILT20 தொடர்களிலும் (ஐபிஎல் உரிமையாளர்கள் உள்ள அணிகள்) பாகிஸ்தான் வீரர்கள் பெரும்பாலும் இடம்பெறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Farhan opens up about Pakistan players boycotting The Hundred league series in England


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




சினிமா

Seithipunal
--> -->