டெஸ்ட் தோல்விகளால் கொதிக்கும் ரசிகர்கள்! கம்பீரை நீக்க கோரிக்கை...! - கபில்தேவின் பதில் என்ன?
Fans furious over Test defeats Demand remove Gambhir What Kapil Devs response
சொந்த மண்ணில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஒயிட்வாஷ் ஆனது ரசிகர்களையும் விமர்சகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.இதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு நியூசிலாந்து எதிரான டெஸ்ட் தொடரையும் 0–3 என இழந்த இந்திய அணி, உள்நாட்டில் 40 ஆண்டுகளில் முதன்முறையாக தொடர்ந்து இரண்டு டெஸ்ட் தொடர்களை பறிகொடுத்துள்ளது.

இந்த நிலைமைக்காக தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மீது சமூக வலைதளங்களில் கடும் அதிருப்தி வெடித்தது. “அவரை உடனே மாற்ற வேண்டும்”, “சோதனைப் பெயரில் அணியின் அடித்தளமே ஆட்டிவைக்கப்படுகிறது” என ரசிகர்கள் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் (ஒருநாள் & டி20) இந்திய அணி ஆபத்தான லயத்தில் இருந்தாலும், கம்பீரின் கண்காணிப்பில் டெஸ்ட் அணியின் பக்கம் சரிவை மட்டுமே சந்தித்து வருகிறது.
இதனால், “டெஸ்ட் மற்றும் வெள்ளைப்பந்து அணிகளுக்கு தனித்தனி பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” என பல முன்னாள் வீரர்கள் மற்றும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து இந்திய முன்னாள் கேப்டன் கபில்தேவிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, அவர் மிகத் தெளிவாக,“இதற்கு நான் நேரடியான பதில் சொல்ல முடியாது. கிரிக்கெட்டின் நலனுக்காக எது சிறந்த முடிவோ, அதையே நிர்வாகம் செய்ய வேண்டும். நீங்கள் என்ன விரும்புகிறீர்கள் என்பது முக்கியம்” என பதிலளித்தார்.
English Summary
Fans furious over Test defeats Demand remove Gambhir What Kapil Devs response