ருத்ரதாண்டவம் ஆடிய சூரியகுமார் யாதவ்.. இறுதியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி.!!
ENG vs IND 3rd T20 Match ENG Win
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. முதலாவது டி20 போட்டியில் 50 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. நேற்று முன் தினம் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்தின் கேப்டன் ஜோஸ் பட்லர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி வீரர் ஜோஸ் பட்லர் 18 ரன்னிலும், ஜேசன் ராய் 27 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். டேவிட் மலான், லிவிங்ஸ்டன் இருவரும் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
அதிரடியான ஆட்டத்தில் ஈடுபட்ட டேவிட் மலான் அரை சதம் அடித்தார். அதன் பிறகு இருவரும் பவுண்டரி, சிக்ஸர்கள் என பந்தை பறக்க விட்டனர். டேவிட் மலான் 77 ரன்களில் ஆட்டமிழந்தார். லிவிங்ஸ்டன் 42 ரன்கள் எடுத்து இறுதிவரை அட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்தது. ரிஷப் பண்ட் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். விராட் கோலி, ரோஹித் சர்மா தலா 11 ரன்களில் ஆட்டமிழந்தனர். 31 ரன்னுக்குள் இந்தியன் மூன்று விக்கெட்களை இழந்து தடுமாறியது, அடுத்து களம் ஷ்ரேயஸ் அய்யர், சூர்யகுமார் சூர்யகுமார் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதில் ஷ்ரேயஸ் அய்யர் நிதானமாக ஆடினார். சூரியகுமார் யாதவ் அதிரடியாக இறங்கினார். மைதானத்தின் நான்கு பக்கமும் பந்துகளை சிக்ஸர், பவுண்டுகளாக சூரியகுமார் விலாசினார்.
மேலும், தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அவர் 55 பந்துகளில் 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து 17 எண்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தியா 2 - 1 என்ற கணக்கில் டி20 தொடரை வென்றது.
English Summary
ENG vs IND 3rd T20 Match ENG Win