தோனி ரசிகர்களுக்கு உற்சாக செய்தி.. இந்திய அணியில் முக்கிய பொறுப்பு.! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி 2-வது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது. இதில், இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து வெளியேறியது.

டி20 உலக்கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட இந்திய அணி சரியாக விளையாடாமல் அரையிறுதியுடன் வெளியேறியதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இந்திய அணியின் செயல்பாடு குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பலரும் ட்ரோல் செய்தனர். மேலும், இந்திய முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சித்திருந்தனர்.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை மீண்டும் இந்திய அணியில் சேர்க்க பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் எம்.எஸ்.தோனிக்கு இந்திய அணியில் முக்கிய பொறுப்பை கொடுக்க பிசிசிஐ ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்திய அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் 3 விதமான கிரிக்கெட் அணியிலும் பயிற்சியாளராக இருந்து வருவதால், அவரது பணி சுமை அதிகமாக இருப்பதால் அதனை குறைக்க பிசிசிஐ நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும், உலகக் கோப்பை போன்ற தொடர்களில் அச்சமற்ற இந்திய அணியை வழிநடத்த தோனியை இயக்குனராக நியமிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 2023 ஐபிஎல் சீசன் உடன் தோனி சென்னை ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாகவும், அதன்பிறகு இந்திய அணியின் இயக்குனராக நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dhoni possible to appoint to Indian team director


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->