தோனிக்கு ஒய்வு! ரசிகர்களுக்கு அதிர்ச்சி! புதிய கேப்டனுடன் களமிறங்கும் சென்னை!  - Seithipunal
Seithipunal


இன்றைய ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி தேசிய மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில், டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

சென்னை அணியின் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்து கொண்டிருக்கின்ற தோனி இந்த ஆட்டத்தில் விளையாடாமல் ஓய்வில் இருப்பதாக அறிவித்துள்ளார். அதற்கு பதிலாக துணைக் கேப்டன் ரெய்னா கேப்டன் பொறுப்பை ஏற்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் அவர் ஆட்டத்தில் இல்லை என்பதால் விக்கெட் கீப்பராக வெளிநாட்டு வீரர் சாம் பில்லிங்ஸ் அணியில் வருவதால், வெளிநாட்டு வீரரை நீக்க வேண்டும் என்பதால் அணியில் இருந்த சாண்டனர் நீக்கப்பட்டுள்ளார். 

அவருக்கு பதிலாக இந்திய வீரர் கரண் ஷர்மா  இணைக்கப்பட்டுள்ளார். ஆட்டத்திற்கு முந்திய பயிற்சியின் போது கால்பந்து  விளையாடி வரும் தோனி ஓய்வுக்காக மட்டுமே இந்த போட்டியில் விளையாடவில்லை என தெரிவித்துள்ளார். அடுத்த போட்டியில் இருந்து விளையாடுவார் என ரெய்னா தெரிவித்துள்ளார். 

கடந்த ஆட்டத்தில் திடீர் தோல்வியை தழுவிய ஹைதரபாத் அணி அதனை சரிக்கட்டும் விதமாக கடந்த ஆட்டத்தில் விளையாடாத யூசுப் பதானும், ஷாபாஸ் நதீமும் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளதாக கனே வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.  தோனி விளையாடாதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாகவே அமைந்திருக்கும். ஏற்கனவே பாதுகாப்பு காரணங்களுக்காக ஹைதராபாத்தில் கொடி, அட்டைகள் அனுமதிக்கப்படவில்லை என்பதால் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கவலையுடன் பதிவிட்டு இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது



 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

dhoni is not playing today match against srh in Hyderabad


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->