அணியில் அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கிய ஹைதரபாத் அணி! டெல்லி அணி 155 ரன்கள் குவிப்பு!  - Seithipunal
Seithipunal


ஐபிஎல் தொடரின் இன்றைய இரண்டாவது லீக் போட்டியில்  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி தேசிய ஸ்டேடியத்தில் விளையாடுகின்றனர். டாஸ் வென்ற ஹைதரபாத் அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். 

ஹைதரபாத் அணியில் நான்கு மாற்றங்களை செய்திருந்தது.  இதுவரை தொடர்ந்து வாய்ப்பளிக்கப்பட்டு சிறப்பாக விளையாடாத மணீஷ் பாண்டே, யூசுப் பதான், சித்தார்த் கவுல் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இதுவரை அதிகபட்சமாக அணியில் இடம்பெறாத கலீல் அகமது, ரிக்கி பயி, அபிஷேக் ஷர்மா ஆகியோர் அணியில் அழைக்கப்பட்டனர். இதுவரை சிறப்பாக ஆடி வந்த முகமது நபி வில்லியம்ஸின் வருகையால் அவர் நீக்கப்பட்டார். 

அதேபோல டெல்லி அணியின் சார்பில் தென்னாபிரிக்க வீரர் காலின் இங்றோம் அவர் மனைவிக்கு குழந்தை பிறந்திருப்பதால் அவர் நாடு திரும்பியதும் அவர் இடத்திற்கு நியூசிலாந்தின் கொலின் முன்றொ  களம் இறங்கினார்.  அணியின் ஆல்ரவுண்டர் ராகுல் தீவெதியா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா இணைக்கப்பட்டுள்ளார்.

டெல்லி கேப்பிடல் அணிக்கு தொடர்ச்சியாக தொடக்க வீரர்கள் ஷிகர் தவான் 7 ரன்களுக்கும்,  ப்ரித்வி ஷா 4 ரன்களுக்கும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதற்கு அடுத்தபடியாக வந்த கொலின் முன்றோ  24 பந்துகளில் 3 சிக்ஸர் 4 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

நிதானமாக விளையாடிய ஸ்ரேயாஸ் அய்யர் 40 பந்துகளில் 45 ரன்களை எடுத்து வெளியேறினார். ரிஷப் பாண்ட் 19 பந்துகளில் 23  ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதற்கடுத்து வந்த கிறிஸ் மோரிஸ்  கீமோ பால், அக்சர் படேல் ராபாடா  சொற்ப ரன்களில் வெளியேற  நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் வெளியேறி 155 ரன்கள் எடுத்துள்ளது.  கலீல் அஹமத் 3 விக்கெட்டுகளையும் புவனேஸ்வர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi capitals set 156 target to sunrisers hydrabad


கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
Seithipunal