சென்னை அணியில் அதிரடி மாற்றம்.. முக்கிய வீரர் நீக்கம்.? - Seithipunal
Seithipunal


ஐபிஎல் தொடரின் இருபெரும் ஜாம்பவான் அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டி இன்று நடைபெறுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை நடைபெற்றுள்ள 6 போட்டிகளில் வெறும் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதேபோல மும்பை இந்தியன்ஸ் அணி 6 போட்டிகளில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. 

தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் இரு அணிகளும் இன்று மோதுவதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நிச்சயம் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. துவக்க வீரர்களான ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் ராபின் உத்தப்பா களம் இறங்குவார்கள். மொய்ன் அலி கடந்து 2 போட்டிகளில் சொதப்பினாலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும். அதேபோல அம்பத்தி ராயுடு, சிவம் துபே ஆகியோர் மிடில் ஆர்டரில் களமிறங்குவார்கள். ஆல் ரவுண்டர்கள் வரிசையில் ஜடேஜா மற்றும் பிராவோ ஆகியோர் இடம்பெறுவது சந்தேகமில்லை.

ஆனால், பந்து வீச்சாளர்கள் வரிசையில் நிச்சயம் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த போட்டியில் சென்னை அணி தேடிவந்த வெற்றியை ஒரே ஓவரில் எதிரணிக்கு திருப்பி கொடுத்த காரணத்தால், கிரிஸ் ஜோர்டன் அணியில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக  டுவைன் பிரெடோரியஸ்-க்கு மீண்டும் ஆடும் லெவனில் இடம் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகேஷ் தீக்‌ஷன்னா, முகேஷ் சவுத்ரி ஆகியோருக்கும் ஆடும் லெவனில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சென்னை அணியின் உத்தேச பட்டியல் : ருத்துராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மொய்ன் அலி, அம்பத்தி ராயுடு, சிவம் துபே, ஜடேஜா, தோனி, பிராவோ, டூவைன் ப்ரெடோரியஸ், மகேஷ் தீக்‌ஷன்னா, முகேஷ் சவுத்ரி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CSK vs MI Match CSK Predicted Playing XI


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->