தல ஃபஸ்ட்டு..! நாங்களும் பெஸ்ட்டு.!! சென்னைக்கு பஞ்சாப் கொடுத்த ரிவிட்டு.!! - Seithipunal
Seithipunal


இன்று மாலை 4 மணிக்கு தொடங்கிய ஐபிஎல் தொடரின் 55-வது லீக் போட்டியில்  அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யவே, சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டுபிளசி, வாட்சன் ஆகியோரில், வாட்சன் 17 ரன் எடுத்து, நான்காவது ஓவரில் தனது விக்கெட்டை பறி கொடுத்தார்.

பின்னர் டுபிளசி, ரெய்னா-வும் சிறப்பாக ஆடிக்கொண்டு இருக்க, ரெய்னா அரைசதம் கடந்து, 53 ரன் எடுத்த போது தனது விக்கெட்டை பறிகொடுத்தார். டுபிளசி 96 ரன் எடுத்து, 19-வது ஓவரில் அவுட்டாக சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்தது. தோனி (10), பிராவோ(1) அவுட்டாகாமல் இருந்தனர்.

171 ரன்கள் எடுத்தால், வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி, முதல் விக்கெட்டுக்கு  108 ரன்கள் குவித்தது. ராகுல் 19 பந்துகளில் அரைசதம் அடித்து 71 ரன்னில் அவுட் ஆக, கெயில் 28 ரன்கள் சேர்த்த தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதிரடியாக ஆடிய பூரன் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் உட்பட  36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

வெற்றி இலக்கான 171 ரன்களை 18 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு பஞ்சாப் அணி எடுத்து, சென்னை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இன்றுடன் லீக் போட்டிகள் முடிவு பெரும் நிலையில், புள்ளி பட்டியலில் சென்னை அணி முதல் இடத்திலும், பஞ்சாப் அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்த இரு அணிகளுமே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று உள்ளன. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

csk vc kxip match


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகள்..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள தளர்வுகள்..
Seithipunal