சென்னைக்கு இன்னும் பிளே ஆஃப் வாய்ப்பு இருக்கிறது! தோனி போட்ட புதிர்! எப்படி தெரியுமா?!  - Seithipunal
Seithipunal


துபாயில் நடைபெறும் இன்றைய லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். 

இந்த போட்டிக்கான டாஸூக்கு பின் சென்னை கேப்டன் மகேந்திர சிங் தோனியிடம், ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் நம்பிக்கை உங்களிடம் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தோனி, “கணித ரீதியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற இன்னும் வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளார். ஆனால் எந்த சீசனில் நாங்கள் எப்படி விளையாடினோம் என்பதை நினைத்து பார்க்க வேண்டும். 4 அல்லது 5 போட்டிகளில் சிறப்பாக விளையாடவில்லை. புள்ளிப்பட்டியலை பற்றி கவலைப்பட வேண்டாம், வெற்றி பெற்று அதிலிருந்து மேல் வருவோம்" என்று கூறியுள்ளார். 

தோனி சொன்னது போல் சென்னை அணிக்கு ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற தற்போதும் வாய்ப்புள்ளது. 11 போட்டிகளில் விளையாடி உள்ள சென்னை அணி 6 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. எஞ்சி இருக்கும் 3 போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். 

அதே சமயம் புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் இருக்கும் கொல்கத்தா அணி 12 புள்ளிகளுடன் இருப்பதால், அடுத்து வரும் போட்டிகளில் அந்த அணி வெற்றி பெறக் கூடாது. கொல்கத்தா அணிக்கு மீதம் 3 போட்டிகள் உள்ளது. 

மேலும் 10 புள்ளிகளுடன் 5 ஆம் இடத்தில் இருக்கும் பஞ்சாப் அணி மீதமுள்ள கொல்கத்தா அணியுடன் மட்டுமே வெற்றி பெற வேண்டும். அப்போது அவர்களும் 12 புள்ளியுடன் இருப்பார்கள். 

அதேப் போன்று சன்ரைசர்ஸ், ராஜஸ்தான் அணிகளும் 2 வெற்றிக்கு மேல் பெறக்கூடாது. தற்போது -0.733 என்ற மோசமான ரன்ரேட் உடன் உள்ளதால் அடுத்த 3 போட்டிகளிலும் இமாலய வெற்றி பெற்று ரன்ரேட்டை அதிகரிக்க வேண்டும் என்பது முக்கியமான ஒன்றாகும்.

கடந்த வருடம் ஐ.பி.எல் தொடரில் சன்ரைசர்ஸ் அணி 12 புள்ளிகளுடன் ஐ.பி.எல் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது குறிப்பிடதக்கது. அதேப்போன்று தற்போதும் சி.எஸ்.கே அணியும் 12 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்பிருந்தாலும் அது மற்ற போட்டியின் முடிவுகளில் தான் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CSK still chance to go Play off said Dhoni


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal