ஐபிஎல் 2021 : ஜாதவ், ஹர்பஜன் உள்ளிட்ட  6 வீரர்கள் சென்னை அணியில் நீக்கம்!  - Seithipunal
Seithipunal


ஐபிஎல் போட்டிகளில் இந்த வருடம் வீரர்களுக்கான பெரிய ஏலம் நடைபெறாத நிலையில், சிறிய அளவிலான ஏலம் நடக்க உள்ளது. அதற்காக வீரர்களை மாற்றுவதற்கான கடைசி நாளாக இன்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

சென்னை அணியில் கடந்த சீசனில் 6.75 கோடி வாங்கப்பட்ட  பியூஸ் சாவ்லா, 2 கோடிக்கு வாங்கப்பட்ட முரளி விஜய் ஆகியோரை வெளியேற்றுவது உறுதி என்றும், அதேபோல கடந்த ஆண்டு நடைபெற்ற தொடருடன் ஓய்வை வாட்சன் அறிவித்ததால், 2 கோடி ரூபாயும் மிச்சப்படும். சென்னை அணி மூன்று வீரர்களை வெளியேற்றுவது உறுதியாகிவிட்டது. 7.8 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட கேதார்  ஜாதவ் வெளியேற்றப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் 6 வீரர்களை வெளியேற்றியுள்ளது .

தக்கவைத்த சிஎஸ்கே வீரர்கள்: என் ஜகதீசன், ஆர் கெய்க்வாட், கே.எம். ஆசிப், ஆர்.ஜடேஜா, எம்.எஸ். தோனி, ஜே ஹஸ்லவுட், கரண் ஷர்மா, ஏ ராயுடு, எஸ் ரெய்னா, இம்ரான் தாஹிர், தீபக் சஹார், ஃபாஃப் டு பிளெசிஸ், எஸ் தாக்கூர், எம் சாண்ட்னர், டி பிராவோ, எல் என்ஜிடி, சாம் குர்ரன், சாய் கிஷோர்.

வெளியேற்றப்பட்ட வீரர்கள் : கே ஜாதவ், பி சாவ்லா, எம் விஜய், ஹர்பஜன்  சிங், ஷேன் வாட்சன், மோனு சிங் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளார்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CSK retention details IPL2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal