ஒலிம்பிக் போட்டி - பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு மு.க ஸ்டாலின் வாழ்த்து.! - Seithipunal
Seithipunal


பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டியில், இந்தியா சார்பில் 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. 

அந்த வகையில், மகளிர் பேட்மிண்டனில் பெண்கள் ஒற்றையர், எஸ்யு 5 பிரிவின் இறுதிப் போட்டி மற்றும் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இறுதிப் போட்டியில் இந்தியா சார்பில் தமிழகத்தை சேர்ந்த துளசிமதி முருகேசன் சீனாவின் கியு ஹ்யா யங்-ஐ எதிர்கொண்டு விளையாடினர். 

இந்த போட்டியில் துளசிமதி முருகேசன் 17-21, 10-21 என்ற செட் கணக்கில் க்யு ஹ்யா யங்கிடம் தோல்வி அடைந்தார். இதன் மூலம் துளசிமதி வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியுள்ளார். இதே பிரிவில் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தியாவின் மனிஷா ராமதாஸ், டென்மார்க்கின் கேத்ரின் ரோசன்கிரென் உடன் மோதினார். 

இதில் அபாரமாக செயல்பட்ட மனிஷா ராமதாஸ் 21-12, 21-8 என்ற செட் கணக்கில் கேத்ரின் ரோசன்கிரெனை வீழ்த்தினார். இந்த நிலையில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- 

"பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற துளசிமதி முருகேசனுக்கு வாழ்த்துகள்! உங்களின் அர்ப்பணிப்பும், நெகிழ்ச்சியும், தளராத மனப்பான்மையும் லட்சக்கணக்கானோரை ஊக்குவிக்கிறது. நாங்கள் உங்களைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறோம்!

பாரா ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற மனிஷா ராமதாசுக்கு வாழ்த்துகள்! உங்கள் தைரியமும், மன உறுதியும் தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. தொடர்ந்து பிரகாசியுங்கள்!" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cm mk stalin wishes to tamilnadu players for award won olympic game


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->