டெஸ்ட் போட்டிகளின் கிங்... தன்னலம் இல்லாத வீரர்... யார் இவர்? - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சத்தீஸ்வர் புஜாரா-வை பற்றி நாம் இன்று பார்க்க இருக்கிறோம்.

சத்தீஸ்வர் புஜாரா 1988ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் பிறந்தார்.  இவர் 2005ஆம் ஆண்டு முதல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். அக்டோபர் 2010ஆம் ஆண்டு பெங்க;ரில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆனார்.

இவரின் தந்தை ஆரோக்கியதாஸ் ராமசாமி புஜாரா, சௌராஷ்டிர அணிக்காக ரஞ்சிக் கோப்பைப் போட்டிகளில் விளையாடியவர். தாய் ரீமா புஜாரா.

கடந்த 2013ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி புஜாரா-பூஜா ஆகிய இருவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு அதிதி புஜாரா என்ற பெண் குழந்தையும் உள்ளது.

2010ஆம் ஆண்டு முதல் இந்திய டெஸ்ட் அணியில் தனக்கென நிரந்தர இடத்தை பிடித்துள்ளார் புஜாரா.  டெஸ்ட் போட்டிகளில் அனைத்து எதிரணிகளின் பந்து வீச்சாளர்களுக்கும் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்து வருகிறார்.  ஒருமுறை களத்தில் நிலைத்து நின்றுவிட்டால் இவரை ஆட்டமிழக்கச் செய்வது பந்து வீச்சாளர்களுக்கு மிகவும் சவாலான காரியமாகும்.

புஜாரா 11 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 18 ஆட்டங்களில் (இன்னிங்ஸ்) விளையாடி 1000 ரன்களை எடுத்தார். இதன்மூலம் அதிவிரைவாக 1000 ரன்களை கடந்த வீரர் எனும் சாதனையைப் படைத்தார்.

பிப்ரவரி 2017ஆம் ஆண்டு வங்காளதேச கிரிக்கெட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 1,605 ரன்களை எடுத்தார். இதன் மூலம் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்களை எடுத்த இந்திய வீரர் எனும் சாதனையை படைத்தார். 

 2017ஆம் ஆண்டு விளையாட்டு துறையின் உயர் விருதுகளில் ஒன்றான அர்ஜுனா விருது சத்தீஸ்வர் புஜாராவுக்கு வழங்கப்பட்டது. 2013ஆம் ஆண்டின் பன்னாட்டு கிரிக்கெட் அவையின் சிறந்த வீரருக்கான விருதினைப் பெற்றார் புஜாரா.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cheteshwar pujara history


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->