இந்திய கிரிக்கெட் அணியின்  தேர்வுக்குழு தலைவராக சேத்தன் ஷர்மா மீண்டும் தேர்வு.! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணியின்  தேர்வுக்குழு தலைவராக சேத்தன் ஷர்மா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி 2-வது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது. இதில், இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து வெளியேறியது.

டி20 உலக்கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட இந்திய அணி சரியாக விளையாடாமல் அரையிறுதியுடன் வெளியேறியதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இந்திய அணியின் செயல்பாடு குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பலரும் ட்ரோல் செய்தனர். மேலும், இந்திய முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சித்திருந்தனர்.

இந்த நிலையில் ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை என இந்திய அணி தொடர் தோல்விகளை சந்தித்த நிலையில், இந்திய அணி தேர்வுக் குழு உறுப்பினர்கள் அனைவரையும் நீக்கப்பட்டது. மேலும், சேத்தன் ஷர்மா தலைமையிலான தேர்வுக்குழுவில் இடம்பெற்றிருந்த அனைவரையும் பிசிசிஐ நீக்கியது.

மேலும், புதிய தேர்வாளர்களுக்கான விண்ணப்பங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு நவம்பர் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என பிசிசிஐ அறிவித்திருந்தது.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவராக சேத்தன் ஷர்மா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேர்வுக்குழு உறுப்பினர்களாக ஷிவ் சுந்தர் தாஸ், சுப்ரதோ பானர்ஜி, சலில் அங்கோலா, ஸ்ரீதரன் ஷரத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chetan Sharma continue india team selection committee leader


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->