அஜித்துடன் இணைந்த பிரபல கார் ரேஸிங் வீரர் - யார் தெரியுமா?
car racer Narain Karthikeyan joined ajith car racing
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார் திரைப்படங்களைத் தாண்டி கார் ரேஸிங்கிலும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி படத்துக்கு பிறகு சினிமாவில் இருந்து தாற்காலிகமாக விலகிய இவர் கார் ரேஸில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
சமீபத்தில் நடிகர் "அஜித்குமார் ரேஸிங்" என்ற கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெறும் கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் பெற்றுள்ளது.

இந்த நிலையில், நடிகர் அஜித்குமார் ரேஸிங் கார் பந்தய நிறுவனத்தில் ஓட்டுநராக தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக, அஜித்குமார் ரேஸிங் எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- "நரேன் கார்த்திகேயனை அஜித்குமார் ரேஸிங்கிற்கு அழைப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம்.
நரேன் எங்களது அணியில் இணைவது உண்மையிலேயே பாக்கியம். அவருடன் இணைந்து பந்தயத்தில் ஈடுபடுவது கௌரவமானது. நரேனுடன் சேர்ந்து 'ஆசிய லீ மான்ஸ்' தொடர் நம் அனைவருக்கும் மிகவும் சிறப்பு வாய்ந்தது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
car racer Narain Karthikeyan joined ajith car racing