நாளை "பாக்ஸிங் டே" டெஸ்ட் மேட்ச்: அப்படி என்றால் என்ன? கிரிக்கெட் வீரர்கள் குத்துசண்டை போடுவார்களா?! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது ஆடிவருகிறது. அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்நிலையில், உலகின் மிகப் பெரிய மைதானங்கள் ஒன்றான மெல்போனில் நாளை 2-வது டெஸ்ட் ஆட்டம் தொடங்க உள்ளது. இந்திய நேரப்படி நாளை காலை 5 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென் 1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

"பாக்ஸிங் டே" டெஸ்ட் மேட்ச்:

கிறிஸ்துமஸ் மறுநாள் ஆடும் கிரிக்கெட் போட்டியை "பாக்ஸிங் டே" என்று கிரிக்கெட் உலகில் கூறுவார்கள். பாக்ஸிங் டே என்பதற்கு அர்த்தம் குத்துசண்டை அல்ல, பாக்ஸிங் டே என்பது கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு ஏழை எளியவர்களுக்கும், தங்களது நிறுவனத்தில் பணியாற்றும் வேலை ஆட்களுக்கும் கிறிஸ்துமஸ் பரிசாக பரிசுப் பெட்டகம் தரப்படும்.

கிறிஸ்துமஸ் மறுநாளான நாளை அந்த பரிசு பெட்டிகளைத் (கிப்ட் பாக்ஸ்களை) திறப்பார்கள். ஆகவே பாக்ஸ் ஓபன் செய்யும் நாளே 'பாக்சிங் டே' என்றழைக்கப்படுகிறது.

கடந்த 1950ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியா நாட்டில் 'பாக்சிங் டே டெஸ்ட் போட்டி' நடந்து வருகிறது. பல ஆண்டுகள் அந்த குறிப்பிட்ட தினத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடத்த முடியாமல் இருந்தாலும், கடந்த 1980-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பாக்சிங் டெஸ்ட் போட்டியை நடத்தும் உரிமத்தை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பெற்றுள்ளது.

அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி பாக்ஸிங் டே அன்று ஏதாவது ஒரு அணி அங்குள்ள புகழ்பெற்ற மெல்போர்ன் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட் போட்டியை விளையாடி கொண்டிருக்கும். அதன்படி இந்த வருடம் பாக்ஸிங் டே -வில் இந்திய அணி ஆஸ்திரேலியா அணியுடன் நாளை பாக்சிங் செய்ய போகிறது.

இதற்கிடையே, நாளை ஆடப்போகும் இந்திய அணி வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,

ரஹானே (கேப்டன்)
மயங்க் அகர்வால்,
கில், 
ரிஷப பந்த்,
புஜாரா, 
விகாரி, 
ஜடேஜா, 
ரவிச்சந்திரன் அஸ்வின், 
உமேஷ், 
பும்ரா, 
சிராஜ்.

இந்திய அணியில் கில், ரிஷப் பந்த் இடம்பெற்றுள்ளனர். அஜிங்கிய ரஹானே இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Boxing Day test match ind vs aus


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal