சீனியர் மட்டும் அல்ல, மொத்தமாக நீங்களும் வெளியேறுங்கள்! புதிய டீமை உருவாக்க கங்குலி அதிரடி! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அறிவித்துள்ளார். 

இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக இந்திய அணியின் முன்னாள் வீரர் எம்எஸ்கே பிரசாத் இருந்து வருகிறார். கடந்த 2015-ம் ஆண்டு தலைவராக எம்எஸ்கே பிரசாத் நியமிக்கப்பட்டார். பிரசாத் பதவி ஏற்ற போதே 
ககன் கோடாவும் நியமிக்கப்பட்டார்.

அதன்பிறகு 2016-ல் ஜட்டின் பரஞ்போ, சரன்தீப் சிங், தேவங் காந்தி ஆகியோரும் தேர்வுக்குழுவில் சேர்க்கப்பட்டனர். நீதிபதி லோதா பரிந்துரைக்கு முன் தேர்வுக்குழுவினரின் பதவிக்காலம் என்பது நான்கு ஆண்டுகளாக இருந்தது. லோதா பரிந்துரையில் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாக மாற்றப்பட்டது. இருப்பினும் பிரசாத்தின் பதவிக்காலம் குறித்து முடிவு செய்யப்படாமல் இருந்தது.

இந்த நிலையில்தான் ஆண்டு பொதுக்கூட்டம் பிசிசிஐ தலைவர் கங்குலி தலைமையில் நடைபெற்றது. இதில் பழைய விதிகளின் படி தேர்வுக்குழுவின் காலம் நான்கு ஆண்டு தான் எனவும், தற்போதைய தேர்வு குழுவிற்கு பதவிக்காலம் முடிந்து விட்டதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பதை கங்குலி உறுதி செய்துள்ளார்.

மேலும், 2016-ல் தேர்வு செய்யப்பட்டவர்களின் பதவிக்காலமும் இத்துடன் முடிவுக்கு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய சீனியர் கிரிக்கெட் அணிக்கு புதிதாக தேர்வுக்குழு நியமனம் செய்யப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BCCI decide new selection committee form for senior cricket team


கருத்துக் கணிப்பு

பெண் மருத்துவர் கொலை வழக்கில் போலீசார் நடத்திய என்கவுண்டர்!
கருத்துக் கணிப்பு

பெண் மருத்துவர் கொலை வழக்கில் போலீசார் நடத்திய என்கவுண்டர்!
Seithipunal