#IPL2022 : மும்பையை வீழ்த்தி.. 3-வது இடத்துக்கு முன்னேறியது பெங்களூரு அணி.! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 18வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பௌலிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சூரியகுமார் யாதவ் 37 பந்தில் 68 ரன்களை குவித்தார். பெங்களூர் அணி சார்பில் ஹசரங்கா, ஹர்ஷல் படேல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

அதனைத் தொடர்ந்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி 18.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக அனுஜ் ராவட் 66 ரன்களும், விராட் கோலி 45 ரன்களும் எடுத்தனர்.

இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி 3 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளி பட்டியலில் 3வது இடத்தை பிடித்துள்ளது. மேலும், நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னையை தொடர்ந்து மும்பை அணியும் விளையாடியுள்ள 4 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Banglore beat Mumbai by 7 wickets


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->