இந்தியாவுடனான ஒருநாள் போட்டி! 1986 க்கு ஓடிப்போன ஆஸ்திரேலியா அணி! இந்த சென்டிமெண்டாவது ஒர்க்அவுட் ஆகுமா!  - Seithipunal
Seithipunal


இந்தியாவிற்கு எதிரான ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள் தொடர் நாளை மறுநாள் ஆரம்பம் ஆகிறது. இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணி ஒரு மாற்றத்தினை கொண்டு வந்துள்ளது. கடந்த 1986 ஆம் ஆண்டு ஆடிய ஆஸ்திரேலிய அணியின் ஆடையின் வடிவமைப்பில் புதிய ஆடை வடிவமைக்கப்ட்டுள்ளது. 

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் மோசமாக விளையாடிய வீரர்களை அடுத்த தொடருக்கான அணியில் நீக்கியுள்ளது ஆஸ்திரேலியா நிர்வாகம் நீக்கியுள்ளது. இந்தியாவிற்கு எதிராக ஆடிய ஷான் மார்ஷ், மிட்செல் மார்ஷ், ஆரோன் ஃபிஞ்ச், பீட்டர் ஹாண்ட்ஸ்காம்ப் என ஆஸி அணியில் விளையாடிய நான்கு முன்னணி பேட்ஸ்மேன்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள். ஆனால் சிறப்பாக செயல்பட்ட பந்துவீச்சாளர்கள் யாரும் அணியில் இருந்து நீக்கப்படவில்லை.

இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து மாறுபட்ட ஒருநாள் போட்டிக்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணி பெரும்பாலும் உள்நாட்டில் ஒரு வண்ண சீருடையில், அயல்நாடுகளில் ஒரு வண்ண சீருடையுடனும் விளையாடும் வழக்கத்தினை கொண்டுள்ளது. இந்த முறை சற்று வித்தியாசமாக 33 வருடம் பின்னோக்கி சென்று தங்கள் நாட்டின் பழைய வடிவமைப்பிலான ஆடையை தேர்ந்துடுத்துள்ளது. இந்த செண்டிமெண்ட் வெற்றியை கொடுக்கிறதா என பார்க்கலாம்!  

English Summary

Australia Team change odi uniform


கருத்துக் கணிப்பு

இந்திய அணியில் நான்காவது இடத்தில் யாரை களமிறக்கலாம்?
கருத்துக் கணிப்பு

இந்திய அணியில் நான்காவது இடத்தில் யாரை களமிறக்கலாம்?
Seithipunal