ஆசிய விளையாட்டுப் போட்டி: ஹாட்ரிக் தங்கம் வென்ற இந்திய மகளிர் கபாடி அணி, ஸ்குவாஷ் பிரிவில் வெண்கலம் வென்ற தமிழக இணையருக்கு அன்புமணி இராமதாஸ் வாழ்த்து!
Asian game 2026 anbumani ramadoss wish medal winners
பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று நடைபெற்ற மகளிர் கபாடி இறுதிப் போட்டியில் ஈரான் அணியை 37-34 என்ற கணக்கில் இந்திய அணி வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றிருப்பது பெருமிதம் அளிக்கிறது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் கபாடி ஆட்டத்தில் இந்திய அணி தொடர்ச்சியாக வென்றுள்ள மூன்றாம் தங்கப் பதக்கம் இதுவாகும். இந்திய மகளிர் கபாடி அணியினரின் சாதனைப் பயணம் தொடரட்டும்.
ஜப்பான் நாட்டின் அய்ச்சி நகோயா நகரில் நடைபெற்று வரும் 20-ஆம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் கலப்பு இரட்டையர் ஸ்குவாஷ் போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த ஜோஸ்னா சின்னப்பா - வேலவன் செந்தில்குமார் இணையர் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றிருப்பது மகிழ்ச்சியளிக்கி்றது. அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த இணையர், இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ஹாங்காங் இணையரிடம் போராடித் தோல்விடைந்தனர். விதிகளின்படி அவர்களுக்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்படுகிறது. இதே போட்டியின் பிற ஆட்டங்களில் அவர்கள் சிறப்பாக விளையாடி பதக்கங்களை வெல்ல வாழ்த்துகள்.!
English Summary
Asian game 2026 anbumani ramadoss wish medal winners