ஆர்சிபி அணி வெற்றி குறித்து., அனுஷ்கா சர்மா என்ன கூறியுள்ளார் பாருங்கள்.!  - Seithipunal
Seithipunal


சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் நேற்று நடந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சஸ் பெங்களூர் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா இந்த வெற்றியை நேரில் இருந்து பாராட்ட முடியாத காரணத்தால், தனது டிவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்து இருக்கின்றார். 

வெற்றியின் துவக்கம் என்றும் விராட் கோலி டீம் வெற்றியை கொண்டாடும் புகைப்படம் ஒன்றையும் அதில் வெளியிட்டுள்ள அவர் சில சிறப்பு எமோஜிகளையும் வெளியிட்டு தன்னுடைய உற்சாக மனப்பான்மையை வெளியிட்டுள்ளார். 

அனுஷ்கா சர்மா, விராட் கோலியின் இந்திய அணி போட்டிகளில் மட்டுமின்றி ஆர்சிபியின் போட்டிகளிலும் நேரில் பங்கேற்று அவரை உற்சாகப்படுத்துவார். இந்த நிலையில், அனுஸ்கா கர்ப்பமாக இருப்பதால், அவர் ஐபிஎல் போட்டிகளில் நேரில் பங்கேற்கவில்லை. இருப்பினும், நேற்றைய போட்டியில் பெங்களூரு அணியின் வெற்றியை அவர் வெற்றியின் துவக்கம் என தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாராட்டி இருக்கின்றார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Anushka Sharma Cheers For Royal Challengers Bangalore 


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->