டி20 உலகக் கோப்பை; அபிஷேக் சர்மா ஹாட்ரிக் டக் அவுட்; தொடரில் இருந்து விலகிய மதீஷ பத்திரன; மாற்று வீரர் யார்..? - Seithipunal
Seithipunal


10 வது டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் 8 சுற்றுக்கு குரூப் A இல் இருந்து இந்தியா,பாகிஸ்தான்  அணிகளும், குரூப் B- இல் இலங்கை, சிம்பாவே அணிகளும், குரூப் C-இல்  இங்கிலாந்து, வெஸ்ட் இந்தீஸ் அணிகளும், குரூப் D-இல் இருந்து, சவுத்தாபிரிக்கா, நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளன.

இந்நிலையில் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா உடனான போட்டியில், இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பத்திரனா காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக போட்டியில் இருந்து வெளியேறினார். தற்போது முதல் இந்த நடப்பு டி 20 உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியுள்ளார்.

அவர் கெண்டைக்கால் தசைப்பிடிப்பில் இருந்து மீண்டு வர பல வாரங்கள் ஆகலாம் என்பதால், ஐபிஎல் தொடரில் அவர் பங்கேற்பாரா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடரில் பத்திரனாவுக்கு பதிலாக தில்ஷன் மதுஷங்க இலங்கை அணியில் இடம் பிடித்துள்ளார். இலங்கை அணி, சூப்பர் 08 சுற்றில் முதலாவதாக சிம்பாபேவுடன் மோதவுள்ளது.

இதேவேளை, டி20 உலகக் கோப்பை தொடரில் தொடர்ந்து 03-வது முறையாக அபிஷேக் சர்மா டக் அவுட் ஆகி வெளியேறி அதிர்ச்சி கொடுத்துள்ளார். அமெரிக்காவுடனான போட்டியில் முதல் பந்திலும், பாகிஸ்தானுடன் 04-வது பந்திலும் ஆட்டமிழந்தார். 

அதேபோன்று இன்று நெதர்லாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆர்யன் தத் ஓவரில் 03-வது பந்தில் அபிஷேக் சர்மா கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார். நமீபியாவுடன் அபிஷேக் சர்மா உடல்நலக் குறைவு காரணமாக ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Abhishek Sharma hat trick ducks out in T20 World Cup and Matheesha Pathirana out of series


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->