T 20 உலகக் கோப்பை வெற்றிக்கு இந்திய அணிக்கு ரூ.21.5 கோடி பரிசு அறிவிப்பு...!
21point5 crore prize money announced Indian team winning T20 World Cup
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி வரலாற்றுச் சாதனை படைத்தது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் குவித்து பெரிய இலக்கை நிர்ணயித்தது.
அதிரடி ஆட்டம் வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன் 46 பந்துகளில் 89 ரன்கள் (5 பவுண்டரி, 8 சிக்சர்) குவித்தார். இஷான் கிஷன் 25 பந்துகளில் 54 ரன்களும், அபிஷேக் சர்மா 21 பந்துகளில் 52 ரன்களும் எடுத்தனர்.

இறுதியில் ஷிவம் துபே அதிரடியாக 8 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்தார்.256 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி இந்திய பந்துவீச்சாளர்களின் துல்லியமான தாக்குதலை சமாளிக்க முடியாமல் 19 ஓவர்களில் 159 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டிம் ஷெய்பெர்ட் 52 ரன்களும், கேப்டன் சான்ட்னெர் 43 ரன்களும் எடுத்தாலும் அணியை காப்பாற்ற முடியவில்லை.
இந்திய அணிக்காக ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகள் வீழ்த்தி வெற்றியின் நாயகனாக திகழ்ந்தார். அக்ஷர் பட்டேல் 3 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்ட்யா, வருண் சக்கரவர்த்தி, அபிஷேக் சர்மா தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
இதன் மூலம் இந்தியா 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று மூன்றாவது முறையாக டி20 உலகக்கோப்பையை கைப்பற்றியது. இதற்கு முன்பு 2007 மற்றும் 2024 ஆண்டுகளில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றிருந்தது.
மேலும் தொடர்ந்து இரண்டு முறை கோப்பையை வென்ற முதல் அணியாகவும் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது.இந்த வெற்றியுடன் இந்திய அணிக்கு ரூ.21.5 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
இரண்டாம் இடம் பிடித்த நியூசிலாந்து அணிக்கு ரூ.10.75 கோடி வழங்கப்பட்டது. மொத்தமாக இந்த தொடருக்காக ரூ.101 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
English Summary
21point5 crore prize money announced Indian team winning T20 World Cup