2 வீரர்கள் சதம்..முதல் நாளில்  316 ரன்கள் குவித்த தென் ஆப்பிரிக்கா அணி! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 2 வீரர்கள் சதம் அடித்து அசத்தியுள்ளனர்.முதல் நாளில் தென் ஆப்பிரிக்கா அணி 316 ரன்கள் குவித்துள்ளனர். 

 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கேப்டவுனில் நேற்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா பேட்டிங்கை தேர்வு செய்தார். அப்போது  முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 72 ரன்களுக்குள் 3 முன்னணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது நெருக்கடிக்கு மத்தியில் ஜோடி சேர்ந்த பவுமா - ரையான் ரிக்கெல்டன் இணை அணியை சரிவிலிருந்து மீட்டதுடன் அபாரமாக விளையாடிய இருவரும் சதமடித்து அசத்தினர். அபாரமாக ஆடிய ரிக்கெல்டன் 2-வது சதத்தையும், பவுமா 4-வது சதத்தையும் பதிவு  செய்தனர். அணியின் ஸ்கோர் 307-ஆக உயர்ந்தபோது, பவுமா 106 ரன்களில் கேட்ச் ஆனார். இவர்கள் இருவரும் இணைந்து 235 ரன்கள் பார்ட்னர்ஷிப் குவித்து அசத்தினர்.

முதல் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 80 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 316 ரன்கள் குவித்துள்ளது. ரிக்கெல்டன் 176 ரன்களுடனும் , டேவிட் பெடிங்ஹாம் 4 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 2 வீரர்கள் சதம் அடித்து அசத்தியுள்ளனர்.முதல் நாளில் தென் ஆப்பிரிக்கா அணி 316 ரன்கள் குவித்துள்ளனர். 
 இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

2 Players Hundreds South Africa scored 316 runs on the first day


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..




Seithipunal
--> -->