வெள்ளி, செவ்வாயில் முடி, நகம் வெட்டினால் இப்படி கூட நடக்குமா.? முன்னோர்கள் எச்சரித்தது இதற்காக தானா.?  - Seithipunal
Seithipunal


வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகள் லட்சுமி மற்றும் துர்க்கை அம்மனுக்கு உகந்த நாட்களாக பார்க்கப்படுகிறது. இந்த தினங்களில் நம்மிடம் இருக்கும் செல்வத்தை மற்றவர்களுக்கு கடன் கொடுப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டால் நம்மிடம் இருக்கும் அதிர்ஷ்டம் விலகிவிடும் என்று நம்பிக்கை இருக்கிறது. 

செவ்வாய்க்கிழமை லட்சுமிக்கு முக்கிய நாளாக பார்க்கப்படுகிறது. அன்று நகமும் முடியும் வெட்டினால் துரதிஷ்டம் என்று முன்னோர்கள் கூறுவார்கள். 

மேலும், செவ்வாய்க்கிழமையில் முடி வெட்டினால் ரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் வரலாம் என்று நம்பப்படுகிறது. சனி கிரகத்தின் சக்தி குறைவதனால் செவ்வாயின் எதிர்மறை விளைவுகளுக்கு நாம் ஆளாவோம் என்பது அதன் பின் கூறப்படும் தகவல்.

மகாலட்சுமிக்கு உகந்த நாளாக கருதப்படும் செவ்வாய்க்கிழமையில் ஒரு பொருளை பெறலாமே தவிர இழக்கவே கூடாது என்பது நம்பிக்கை. முடி, நகம் உள்ளிட்டவை வெட்டினாலும் அது நமக்கு இழப்புதான். அதுவும், நம் உடலில் இருக்கும் ஒரு அங்கம் தான்.

பொருளை இழப்பதே தப்பு எனும் பொழுது உடல் உறுப்பை இழப்பது மிகப்பெரிய தவறு என்று கூறப்படுகிறது. எனவே தான் செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் நகம் வெட்டக்கூடாது என்று கூறுகின்றனர். 

அப்படி நம்மிடம் இருக்கும் பொருட்களை செவ்வாய் வெள்ளியில் இழந்தால் அதன் பின் நமக்கு இழப்புகள் அதிகமாகும் என்பது முன்னோர்களின் நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Why Should Not Cut nail or hair Friday or Tuesday


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->