தாமரை மணிமாலை.. வீண் பண விரயத்தை போக்கி.. பணவரவை அள்ளித்தருவதில் சிறந்தது..!
Wear Thamarai manimalai get more money
வீட்டில் ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் தாமரை மணிமாலை
கடவுள் அருளை பெற்றுத்தரும் சாதனங்கள் மக்களுக்கு நன்மை ஏற்படுத்துவதுடன் மக்களின் பொருளாதார வளத்தை உயர்த்தி, வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி அனைத்துவிதமான தடைகளையும் உடைத்து, உயர்வான வாழ்வை அளிப்பவை.
அந்தவகையில் இயற்கையின் அருளை வாங்கி வெளியிடும் தன்மையுடைய பொருட்களின் வரிசையில் தாமரை மணிமாலையும் ஒன்று. லட்சுமிதேவி தாமரையில் வசிப்பதால், வீட்டில் தாமரை விதைகளில் செய்யப்பட்ட மாலையை வைத்திருப்பது, அவரை நம் வீட்டிற்கு வரவழைக்க செய்யும்.
தாமரை மணிமாலை பயன்படுத்தும் முறைகள் :
இயற்கையில் கிடைக்கும் காற்றுக்கு கூட அபரிவிதமான சக்தி உண்டு. அதை எப்படி உபயோகப்படுத்துவது என்பதில்தான் பயன்கள் உள்ளது. அப்படிதான் தாமரை மணிமாலையும் தடைகளை நீக்கி உயர்வான வாழ்க்கைக்கு அஸ்திவாரமிடுகிறது.
காலையில் எழுந்தவுடன் குளித்துவிட்டு இந்த தாமரை மணிமாலையை அணிந்து கொள்வது மிக சிறப்பு.
சுப நிகழ்வுகளில் கலந்து கொள்ளும்போது அணிந்து கொள்வது சிறப்பு. மேலும் அசைவம் சாப்பிடும்போது, அசுப நிகழ்வுகளில் கலந்து கொள்ளும்போது தவிர்த்து கொள்வது நல்லது.
இரவு நித்திரைக்கு செல்லும் முன் இந்த தாமரை மணிமாலையை பூஜையறையில் வைப்பது நல்லது.
தாமரை மணிமாலை நூலில் கோர்க்கப்பட்டு உள்ளதால் தண்ணீர் படாமல் பார்த்து கொள்ளவும்.
வெயிலில் வைத்த பின்பு வேப்ப எண்ணெயை தடவவும். ஏனெனில் இந்த தாமரை மணிமாலைக்கு இனிப்பு சத்து உள்ளது. இனிப்பு சத்துக்கள் உள்ளதால் எறும்புகள் ஊறவும், எலி கடிக்கவும் வாய்ப்புகள் உள்ளது. எனவே, வேப்ப எண்ணெய் தடவுவதன் மூலம் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.
தாமரை மணிமாலை வீட்டில் இருந்தால் ஏற்படும் பயன்கள் :
லட்சுமிதேவியின் அம்சமான தாமரை மணிமாலை அபரிவிதமான நேர்மறை சக்திகளை உள்ளடக்கியது. பணம் ஈர்க்கும் சக்தியாகவும், பொருளாதாரம் மேம்படவும் உதவுகிறது.
குடும்பத்தில் ஏற்படும் பிணக்குகள், ஒற்றுமையின்மை, சகோதரர்கள் இடையேயான பிரச்சனை, பொருளாதாரத்தில் நலிவு, வேலை கிடைக்காமல் தொடர்ந்து தடை ஏற்பட்டு வருவது போன்ற பல பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கக்கூடியது.
இந்த தாமரை மணிமாலை ஒரு வீட்டில் இருக்கிறது என்றால் அனைத்து ஐஸ்வர்யங்கள் அங்கு அதிகளவில் கிடைக்கும் என்பது ஐதீகம்.
நம்பி செயல்பட்டால் அனைத்து தடைகளும் விலகி ஐஸ்வர்யங்கள் பெருகும்.
English Summary
Wear Thamarai manimalai get more money