விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்.. வீட்டில் வழிபாடு செய்வது எப்படி.?! - Seithipunal
Seithipunal


விநாயகர் சதுர்த்தி

வீட்டில் வழிபாடு செய்வது எப்படி:

வினைகளை போக்குபவர் விநாயகர். எந்தவொரு காரியத்தை தொடங்கினாலும் அது எவ்வித தடையும் இல்லாமல் முற்றுப்பெற விநாயகர் வழிபாட்டுடன் தொடங்குவது நமது வழக்கம். எந்த செயல்களை செய்யும் முன்பும் பிள்ளையார் சுழி போட்டுதான் ஆரம்பிக்கிறோம். கணபதியை வணங்கினால் காரியத்தடைகள் யாவும் நீங்கும்.

முழுமுதற் கடவுளான விநாயகரின் முக்கியமான திருவிழா விநாயகர் சதுர்த்தி ஆகும். ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி திதியை விநாயகர் சதுர்த்தி என்று அழைக்கின்றோம். ஒவ்வொரு வருடமும் நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் சிறப்பாகவும், ஆடம்பரமாகவும் கொண்டாடப்படும். வெகு சிறப்பாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழா இந்த ஆண்டு ஆவணி மாதம் 25ஆம் தேதி செப்டம்பர் 10ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.

எப்படி வழிபாடு செய்வது?

வீட்டை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும். வாசலில் மாவிலையைத் தோரணமாகக் கட்ட வேண்டும். பூஜையறையை நன்றாக சுத்தம் செய்து விளக்கு, பூஜை பொருட்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

பூஜையறையில் சிறியதொரு மனையை அமைத்து அதில் கோலமிட்டு இலையை வைத்து கொள்ளவும். இலையின் நுனியை வடக்குப் பார்த்தபடி வைப்பது சிறப்பு. பின் இலையின் மேல் பச்சரிசியை பரப்பி அதன் நடுவே விநாயகர் சிலையை வைக்க வேண்டும். விநாயகர் சிலையை உங்களுக்கு தகுந்தாற்போல் அழகுப்படுத்தி கொள்ளலாம்.

பிறகு விநாயகருக்கு பல வகையான மலர்கள் சூட்டி வழிபடலாம். பல வகையான பழங்களையும் விநாயகருக்கு படைக்கலாம். விநாயகருக்கு பிடித்த அருகம்புல் அல்லது எருக்கம்பூ மாலை செய்து அணிவிக்கலாம்.

விநாயகருக்கு மிகவும் பிடித்த மோதகம், கொழுக்கட்டை, சுண்டல், சர்க்கரை பொங்கல் போன்றவற்றை நைவேத்தியமாக படைக்க வேண்டும்.

விநாயகர் சதுர்த்தி நாளன்று விநாயகர் துதி, விநாயகரின் திருநாமங்கள், விநாயகர் அகவல் படித்து வணங்கலாம். விரதம் இருப்பவர்கள் உணவு எடுத்துக்கொள்ளாமல், பூஜைகளை முடித்து, விநாயகரை வழிபட்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.

எளிமையாக கொண்டாடலாம் வாங்க...

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை எளிமையாக கொண்டாட வேண்டிய சூழ்நிலை நிலவி உள்ளது. கடவுள் வழிபாடு எந்த அளவிற்கு அவசியமோ அதே அளவிற்கு நமது உடல் ஆரோக்கியமும் அவசியம்.

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள சமூக தொற்று காரணமாக விநாயகர் சதுர்த்தி விழா இந்த ஆண்டு வீட்டிலேயே சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

நாட்டையும், மக்களையும் காக்க இந்த ஆண்டு நாம் எளிமையாக விநாயகர் சிலைகளை வீட்டிலேயே வைத்து வணங்கி அனைத்து நலன்களையும் பெற வேண்டிக் கொள்வோம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vinayagar Chaturthi special for 2021 


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->