பஞ்சலிங்க வடிவில்..சிவ ஜோதி நடன மலை..அருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில்.! - Seithipunal
Seithipunal


இந்த கோயில் எங்கு உள்ளது?

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி என்னும் ஊரில் அருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?

கோயம்புத்தூரில் இருந்து சுமார் 27 கி.மீ தொலைவில் பூண்டி அமைந்துள்ளது. பூண்டியில் இருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. 

இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?

ஏழு சிகரங்களை கொண்ட வெள்ளிங்கிரி மலையானது 3500 அடி உயரம் உள்ளது. இம்மலையில் கைதட்டி சுனை, பாம்பாட்டி சுனை போன்ற பல சுனைகள் உள்ளன.

வெள்ளிங்கிரி மலையில் மூன்று புனித தீர்த்தங்கள் அமைந்துள்ளன.

இம்மலை தென் கைலாயம் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறது.

வெள்ளிங்கிரி ஆண்டவர் மலை கோயிலில் சிவபெருமான் தன்னுடைய பக்தர்களுக்கு பஞ்சலிங்க வடிவில் அருள்பாலிக்கிறார்.

இங்கு ஏழு மலைகள் உள்ளன. முதல் ஆறு வெள்ளிங்கிரி மலைகள் மனித உடலில் உள்ள ஆறு சக்கரங்கள் என்று அழைக்கப்படுகிறது.

சஹஸ்ர என்ற ஏழாவது மலை 'சிவபெருமானின் மலை" என்றும், 'சிவ ஜோதி நடன மலை" என்றும் அழைக்கப்படுகிறது.

வேறென்ன சிறப்பு?

வெள்ளிங்கிரி மலையானது இராமாயணம் மற்றும் மகாபாரதம் கதைகளுடன் தொடர்பு உடையது. ஐந்தாவது வெள்ளிங்கிரி மலையில் அன்னை சீதா தேவி தவம் செய்ததாக கூறப்படுகிறது.

வெள்ளிங்கிரியின் ஐந்தாவது மலை மணல் சாம்பல் நிறத்தில் இருப்பதனால் இம்மலை திருநீர் மலை என்றும், புனித சாம்பல் மலை என்றும் அழைக்கப்படுகிறது.

வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் 'தியான லிங்கம்" என்ற தியான மண்டபம் அமைந்திருக்கிறது.

என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?

இத்திருக்கோயிலில் சித்ரா பௌர்ணமி மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.

அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம், சிவராத்திரி மற்றும் ஆருத்ரா தரிசனம் ஆகிய தினங்களில் இங்கு சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெறும்.

எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?

தங்களின் வேண்டுதல்கள் நிறைவேற இத்தல இறைவனை பிரார்த்தனை செய்கின்றனர். 

இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?

தங்களால் முடிந்தவர்கள் மலைமேல் உள்ள ஈசனை நேரில் சென்று தரிசித்து நேர்த்திக்கடனை செலுத்தலாம். இயலாதவர்கள் அடிவாரத்தில் உள்ள சிவனுக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடனை செலுத்தலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Today special velliyangiri Andavar temple


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->