திருப்பதி ஏழுமலையான் கோவில்: டிசம்பர் 2025ல் நிகழவிருக்கும் முக்கிய உற்சவங்கள் மற்றும் விழாக்களின் முழு அட்டவணை!
Tirupati Ezhumalaiyan Temple Complete schedule important festivals and celebrations held December 2025
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டு முழுவதும் பக்தர்களுக்கு ஆன்மிக அனுபவம் வழங்கும் பல்வேறு விழாக்கள் மற்றும் சிறப்பு உற்சவங்கள் நடைபெறுகின்றன. திருப்பதி திருமலை தேவஸ்தானம், பக்தர்களின் வசதிக்காக அடுத்த மாதம் (டிசம்பர் 2025) நடைபெறும் முக்கிய உற்சவங்களின் விரிவான அட்டவணையை வெளியிட்டுள்ளது.

அதாவது,
டிசம்பர் 2 – சக்கர தீர்த்த முக்கொடி
டிசம்பர் 4 – கார்த்திகை தீப உற்சவம் மற்றும் திருமங்கை ஆழ்வார் சாத்துமோரை விழா
டிசம்பர் 5 – திருப்பாணாழ்வார் திருநட்சத்திர விழா
டிசம்பர் 16 – தனுர்மாசம் ஆரம்பம்
டிசம்பர் 19 – தொண்டரடிப்பொடியாழ்வார் திருநட்சத்திர விழா; அத்யாயனோத்ஸவம் ஆரம்பம்
டிசம்பர் 29 – சின்ன சாத்துமோரை
டிசம்பர் 30 – வைகுண்ட ஏகாதசி; வைகுண்ட துவார தரிசனம்; தங்கத் தேரோட்டம்
டிசம்பர் 31 – வைகுண்ட துவாதசி; புஷ்கரணியில் சக்கர ஸ்நானம்
பக்தர்கள், இந்த அற்புதமான விழாக்களை முன்னிட்டு தங்களின் திருப்பதி பயணத்தை திட்டமிட்டு, ஆன்மிக சிந்தனையுடன் சிறப்பான அனுபவத்தை அனுபவிக்கலாம்.
English Summary
Tirupati Ezhumalaiyan Temple Complete schedule important festivals and celebrations held December 2025