வாழ்வில் விளக்கேற்றியது போல் விளங்க வேண்டுமா? அப்போ இந்த நேரத்தை விலக்குங்கள்.!
Thiyajjiyam timeing full details
தற்போதைய சூழ்நிலையில், மக்கள் ஜோதிடத்தின் மீது அதிகளவில் நம்பிக்கை வைத்துள்ளனர். அப்படி உள்ளவர்களுக்கு கூட தியாஜ்ஜியம் என்றால் என்ன? அதன் பயன் என்ன? அந்த நேரத்தில் எதையெல்லாம் செய்யலாம்? எதையெல்லாம் செய்யக்கூடாது? என்பது குறித்து விரிவாக காண்போம்.
தினசரி காலண்டரில் தியாஜ்ஜியம் என்று குறிக்கப்பட்டிருக்கும். தியாஜ்ஜியம் என்றால் "விலக்கப்படும் நேரம்" அல்லது "விஷ நேரம்" என்று பொருள். ‘த்யஜ’ என்ற சம்ஸ்கிருத வினைச் சொல்லுக்கு ‘விடுதல்’ என்று பொருள். அந்த தியாஜ்ஜிய நேரத்தில் எந்தவொரு சுப காரியமும் செய்யக்கூடாது.
இந்த தியாஜ்ய நேரம் ஒவ்வொரு கிழமையிலும் ஒன்றரை மணி நேரம் வரும். அதாவது ஜோதிட கணக்குப்படி, ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்களை குறிக்கும். அதனால், 60 நாழிகை கொண்டது ஒரு நாள். இந்த நாழிகைக்கு ஏற்றபடி தியாஜ்ஜிய நேரம் அமையும். அவை எந்த கிழமைக்கு என்னென்ன நேரம் என்பதை பார்ப்போம்.
ஞாயிறு 32 நாழிகைக்கு மேல் வரும் ஒன்றரை மணி நேரம் தியாஜ்யம் நேரம். திங்கள் மற்றும் புதன் 42 நாழிகைக்கு மேல் வரும் ஒன்றரை மணி நேரம் தியாஜ்யம். செவ்வாய் மற்றும் வியாழன் 31நாழிகைக்கு மேல் வரும் ஒன்றரை மணி நேரம் தியாஜ்யம். வெள்ளிகிழமை 21நாழிகைக்கு மேல் வரும் ஒன்றரை மணி நேரம் தியாஜ்ய நேரம். சனிகிழமை 14 நாழிகைக்கு மேல் வரும் ஒன்றரை மணி நேரம் தியாஜ்ய நேரம். இந்த காலகட்டங்களில் சுபகாரியங்கள் செய்யக் கூடாது .
இதே போல் மாத தியாஜ்யம், நட்சத்திரம் மற்றும் திதி-க்கும் தியாஜ்யம் உண்டு. இது பற்றி பார்ப்போம். முகூர்த்த நிர்ணயத்தில் நட்சதிர தியாஜ்யம், திதி தியாஜ்யம், வார தியாஜ்யம், லக்ன தியாஜ்யம் என்று பல தியாஜ்யங்கள் சொல்லப்பட்டிருக்கிறது. இவற்றை எதற்கு பார்க்க வேண்டும் என்றால், சில காரியங்கள் இந்த லக்ன, திதி, நட்சத்திர, வாரத்தில் செய்ய வேண்டும் என்பதற்காக தான். இதுகுறித்து பார்ப்போம்.
சித்தரை மாதத்தில் அஷ்டமி, ஏகாதசி திதியும், அசுவனி, ரோகினி நட்சதிரமும் கும்ப லக்னமும் இணைந்து வருவது. வைகாசி மாதத்தில் துவாதசி திதியும், சித்திரை, சுவாதி, உத்தராடம் நட்சதிரங்களும், மீன லக்னமும் சேர்ந்து வருவது. ஆனி மாதத்தில் திரயோதசி திதியும் புனர்பூச நட்சதிரமும் ரிஷப லக்னமும் சேர்ந்து வருவது.
ஆடி மாதத்தில் ஷஷ்டி திதியும், பூரம், அவிட்டம் நட்சதிரங்களும், மிதுன லக்னமும் சேர்ந்து வருவது. ஆவணி மாதத்தில் பூராட நட்சதிரமும், மேஷ லக்னமும் சேர்ந்து வருவது. புரட்டாசியில் ஸப்தமி திதியும், சதயம், பூரட்டாதி, ரேவதி நட்சதிரமும், கன்னி லக்னமும் சேர்ந்து வருவது.
ஐப்பசியில் நவமி திதியும், உத்திரட்டாதி நட்சதிரமும், விருட்சக லக்னமும் சேர்ந்து வருவது. கார்த்திகை மாதத்தில் பஞ்சமி திதியும், கிருத்திகை, மிருக சீரிடம், பூசம் நட்சதிரங்களும், துலாம், மகர லக்னங்களும் சேர்ந்து வருவதும். மார்கழி மாதத்தில் துவிதியை, நவமி திதிகளும், விசாகம் அனுசம், பூரட்டாதி திதிகளும், லக்னம் எதுவும் இல்லை.
தையில் மாதத்தில் பிரதமை திதியும், திருவாதிரை, ஆயில்யம், அஸ்தம் நட்சதிரங்களும், கடக லக்னமும் சேர்ந்து வருவது. மாசி மாதத்தில் தசமி, சதுர்தசி திதியும், திருவோணம், மிருக சீரிடம், மூலம் நட்சதிரங்களும், லக்னம் எதுவும் இல்லை. பங்குனி மாதத்தில் சதுர்த்தசி திதியும், பரணி, கேட்டை நட்சதிரங்களும், சிம்ம லக்னமும் சேர்ந்து வருவது.
அந்த அந்த திதி, நட்சத்திர, லக்னக்களுக்கு கொடுக்கப்பட்ட சுப காரியங்கள் அனைத்தும் விலக்கப்பட வேண்டும். இதற்கு உதாரணமாக புது மனைபுக ரோகிணி நட்சதிரமும், துவிதியை திதியும் ரிஷபம் லக்னமும் சுபம் என இருக்கும், ஆனால் மாத தியாஜ்யத்தில் வரும் நாட்கள் இவை விலக்கப்பட வேண்டும் என்பதே இதன் விளக்கம். விலக்கப்படும் நேரத்தை விலக்கினால், வாழ்வு விளக்கேற்றியது போல் விளங்கிவிடும்.
English Summary
Thiyajjiyam timeing full details