நாளை சங்கடஹர சதுர்த்தி... திருவோணம்... நீங்காத செல்வத்தை பெற விரதமிருந்து வழிபடுங்கள்.! - Seithipunal
Seithipunal


திருவோண விரதம்:

மாதந்தோறும் திருவோண நட்சத்திரத்தில் மேற்கொள்ளப்படும் விரதம் திருவோண விரதம். திருவோண விரதம் மேற்கொள்பவர்களின் வாழ்வில் கஷ்டங்கள் நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும். மனக்குறைகள் அகன்று சந்தோஷமான வாழ்க்கை அமையும்.

மேலும், திருமணத்தடை உள்ளவர்கள் இந்த விரதத்தை மேற்கொண்டால் விரைவில் நல்ல வரன் அமையும்.

அதுமட்டுமின்றி குழந்தை இல்லாதவர்கள் இந்த விரதத்தை மேற்கொண்டால் குழந்தைப்பேறு கிடைக்கும் மற்றும் செல்வம் நிலைத்து நிற்கும் என்பது நம்பிக்கையாகும்.

மாதந்தோறும் திருவோண நாளில் திருமாலை வழிபட்டு விரதம் இருந்தால், சீர் குலைந்த மனம் சீராகும்.

உறவினர்களுக்கிடையே ஏற்பட்ட பகை அகலும். துன்பங்கள் அனைத்தும் நீங்கி நன்மைகள் உண்டாகும்.

திருவோண விரதம் இருக்கும் பக்தர்கள் பெருமாளை வணங்கி துதிப்பாடல்கள் பாட வேண்டும். விரதம் இருக்க முடியாதவர்கள் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும். மேலும், இன்று வீட்டில் நெய் விளக்கேற்றி வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.

திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், சந்திர திசை நடப்பவர்கள் பெருமாளை தரிசித்து வணங்குவது சிறப்பாகும்.

திருவோண நட்சத்திரத்தன்று விரதம் இருப்பதால் கல்விச்செல்வம் மற்றும் பொருட்செல்வம் அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும்.

இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த திருவோண நட்சத்திரத்தன்று சுண்டலை நைவேத்தியமாக பெருமாளுக்கு படைத்தால் துன்பங்கள் அனைத்தும் நீங்கி இன்பங்கள் பெருகும்.

சங்கடஹர சதுர்த்தி விரதம்:

ஒவ்வொரு தமிழ் மாதமும் தேய்பிறையில் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தி விரதத்தை தான் சங்கடஹர சதுர்த்தி விரதம் என்றும், சங்கஷ்ட ஹரண சதுர்த்தி விரதம் என்றும் கூறுகின்றனர்.

விநாயகப்பெருமானை தேய்பிறை சதுர்த்தியில் வழிபாடு செய்வது மிகப்பெரும் நற்பலன்களை தரக்கூடியது. தேய்பிறை என்றாலும் விநாயகரின் அருளால் சந்திரனுடைய தேஜஸ் வளர்ந்தது. அந்த நன்னாளை தான் நாம் சங்கடஹர சதுர்த்தியாக வழிபட்டு வருகின்றோம்.

விநாயகப்பெருமானுக்கு வெள்ளை எருக்கு, அருகம்புல் மாலை சாற்றி சங்கடஹர சதுர்த்தி தினத்தில் ஆலயத்தை எட்டு முறை வலம் வருதல் சிறப்பானது ஆகும்.

சங்கடஹர சதுர்த்தியன்று காலையில் குளித்து முடித்து, விநாயகருக்கு பூஜை செய்து விரதம் இருந்து அவருக்கு பிடித்தவற்றை நைவேத்தியம் செய்து விநாயகர் ஸ்லோகங்களை பாராயணம் செய்ய வேண்டும்.

மாலையில் அருகில் உள்ள விநாயகர் ஆலயங்களுக்கு சென்று அங்கு நடைபெறும் பூஜையில் கலந்து கொண்டு, அர்ச்சனை செய்து வழிபட்டு வீடு திரும்பி இரவில் உதயமாகும் சந்திரனை தரிசித்து வழிபாடு செய்து விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

சங்கடஹர சதுர்த்தி தின வழிபாட்டினால், சனி பகவானின் பார்வையால் ஏற்படும் தோஷங்களும், சகல நோய்களும் நீங்குகின்றன.

மேலும், சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பதால் நினைத்த காரியம் கைகூடும். வீண் பழி அகலும். பகைவர்களும் நண்பர்களாவார்கள். தீவினை அகலும். மனச்சுமை நீங்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thiruvona Viratham special for sangadahara sathurthi


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->