செவ்வாய் தோஷத்திலிருந்து எளிமையாக விடுபட., இதை மட்டும் செய்தால் போதும்.!
Solution For sevvai dhosham very easy
திருமண தடைகளை ஏற்படுத்துவதில் நாக தோஷம் போலவே கடுமையான தடைகளை கொடுப்பது செவ்வாய் தோஷம். ஒரு நபரின் ஜாதகத்தில் 12, 8, 7, 4, 2, 3 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் அது செவ்வாய் தோஷத்தில் வரும். சந்திரனுக்கு, சுக்கிரனுக்கு அல்லது லக்னத்திற்கோ அமைப்பாக இருந்தாலும் செவ்வாய் தோஷம் தான்.
இதில் செவ்வாய் தோஷத்திற்கு விதிவிலக்குகளும் இருக்கின்றன. பொதுவாக தென்னிந்தியாவில் பிறந்த நபர்களுக்கு செவ்வாய் தோஷத்தின் பாதிப்பு குறைவாக இருக்கும். இதற்கு முருகப்பெருமானை காரணமாக கூறுவார்கள். எனவே, தான் செவ்வாய்க்கிழமைகளில் முருகனை தரிசிப்பது வழக்கம்.

திருமணத்திற்கு சிறிய பரிகாரங்களை மேற்கொண்டாலே நல்ல பலன்கள் கிடைக்கும். சிவப்பு மலர்களால் முருகனுக்கு அர்ச்சனை செய்து துவரை தானம் கொடுத்தால் செவ்வாய் தோஷத்தின் நன்றாக குறையும். செவ்வாய்க்கிழமையில் ராகு வரும் நேரத்தில் மங்கள சண்டிகா ஸ்தோத்திரம் படித்தால் திருமண தடை நீங்கும்.
முருகனின் அறுபடை வீடுகளுக்கு செவ்வாய்க்கிழமைகளில் சென்றால் செவ்வாய் தோஷத்தில் இருந்து விடுபடலாம்.
வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று செவ்வாய்க்கிழமையில் பரிகார பூஜைகள் செய்யலாம்.

சுமங்கலி பெண்களுக்கு சிவப்பு சேலை, மஞ்சள் கயிறை தானமாக கொடுத்தால் இந்த செவ்வாய் தோஷத்தில் இருந்து நிவர்த்தி கிடைக்கும்
மேற்கூறிய அனைத்தையும் செய்ய முடியாத நபர்கள் வன்னி மரத்தை ஒவ்வொரு செவ்வாயும் தொடர்ந்து வணங்கி வந்தாலே செவ்வாய் தோஷத்தின் பாதிப்பை குறைத்து விடலாம்.
கணவன், மனைவி சண்டை மற்றும் குழந்தை பாக்கிய பிரச்சனை உள்ளிட்டவைகளில் செவ்வாய் தோஷம் பாதிப்பை ஏற்படுத்தும். இவர்கள் ஒவ்வொரு செவ்வாயும் முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டு வருவது இந்த பாதிப்பில் இருந்து காப்பாற்றும்.
English Summary
Solution For sevvai dhosham very easy