சிவராத்திரி விரத வழிபாட்டின் முக்கியமான ஆறு அம்சங்கள் என்னென்ன?! - Seithipunal
Seithipunal


சிவராத்திரியின் வகைகளும்.. அவற்றின் சிறப்புகளும்:

சிவனுக்கு உகந்த இரவு என்று சொல்லக்கூடிய சிவராத்திரியை பற்றி அற்புதமான தகவல்கள் அதிகம் உள்ளன. சிவ சிவ என்று சொன்னால் போதும் துன்பங்கள் எல்லாம் திசை தெரியாமல் போகும்.

சிவம் என்ற சொல்லுக்கு மங்களம் தருபவர் என்று பொருள். சிவபெருமான் லிங்கமாக உருவமெடுத்த தினமே சிவராத்திரி ஆகும். நமசிவாய என்னும் மந்திரத்தை மனதில் நினைக்க எந்த தீமைகளும் நெருங்காது.

ஒரு வருடம் சிவராத்திரி விரதம் இருந்தால் நூறு அசுவமேத யாகம் செய்த பலனும், பல தடவை கங்கா ஸ்நானம் செய்த பலனும் கிடைக்கும்.

சிவனை அதிகாலையில் வணங்கினால் நோய்கள் தீரும். பகலில் வணங்கினால் விருப்பங்கள் நிறைவேறும். இரவில் வணங்கினால் மோட்சம் கிடைக்கும்.

மாத சிவராத்திரி விரத வழிபாட்டின் முக்கியமான ஆறு அம்சங்கள் :

1. சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தல் வேண்டும். இது ஆன்மாவைத் தூய்மைப்படுத்துதலை குறிக்கும்.

2. லிங்கத்திற்கு குங்கும் அணிவித்தல் நல்லியல்பையும், நல்ல பலனையும் வழங்கும்.

3. உணவு நிவேதித்தல் நீண்ட ஆயுளையும், விருப்பங்கள் நிறைவேறுவதையும் குறிக்கும்.

4. தீபமிடுதல் செல்வத்தை வழங்கும்.

5. எண்ணெய் விளக்கேற்றுதல் ஞானம் அடைதலைக் குறிக்கும்.

6. வெற்றிலை அளித்தல் உலக இன்பங்களில் திருப்தியைக் குறிக்கும்.

ஐந்து சிவராத்திரிகள்:

மகா சிவராத்திரி :

மாசி மாத தேய்பிறை சதுர்த்தசி நாளே மகா சிவராத்திரியாகும். இந்த சிவராத்திரிக்கு 'வருஷ சிவராத்திரி" என்ற பெயரும் உண்டு.

யோக சிவராத்திரி :

திங்கட்கிழமையன்று சூரிய உதயம் முதல் இரவு முழுவதும், அதாவது பகல்-இரவு சேர்ந்த அறுபது நாழிகை (இருபத்தி நான்கு மணி)யும் அமாவாசை இருந்தால் அன்று யோக சிவராத்திரி ஆகும்.

நித்திய சிவராத்திரி :

வருடத்தின் பன்னிரெண்டு மாதங்களிலும் வரும் தேய்பிறை-வளர்பிறை சதுர்த்தசி திதி இடம் பெறும் இருபத்தி நான்கு நாட்களும் நித்திய சிவராத்திரி ஆகும்.

பட்ச சிவராத்திரி :

தை மாத தேய்பிறை பிரதமை அன்று தொடங்கி, பதின்மூன்று நாட்கள் தினந்தோறும் முறைப்படி ஒரு வேளை உணவு உண்டு, பதினான்காம் நாளான சதுர்த்தசி அன்று முறைப்படி விரதம் இருப்பது பட்ச சிவராத்திரி எனப்படும்.

மாத சிவராத்திரி :

மாதந்தோறும் அமாவாசைக்கு முன்தினம் வரும் சதுர்த்தசி திதியில் வருவது மாத சிவராத்திரி ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sivarathiri viratha vazhipadu special 2022


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->