ஐயப்பன் கோவிலில் அதிர்ச்சி சம்பவம்!....தென்காசி வாலிபர் அதிரடி கைது!...நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு கேரளா மட்டுமன்றி, தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மாநிலங்களில் இருந்து பக்தர்கள் மாலை அணிந்து,  ஐயப்பன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இந்நிலையில், சபரிமலை கோவிலில் ஆவணி மாத பூஜையையொட்டி கடந்த மாதம் 16-ம் தேதி நடை திறக்கப்பட்டு 21-ம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

தொடர்ந்து 21-ம் தேதி நடை சாத்தப்பட்ட பிறகு கோவில் ஊழியர்கள் கோவிலில் உள்ள உண்டியல்களை ஆய்வு செய்த போது அங்கு உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த காணிக்கை பணம் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், தென்காசி மாவட்டம் கீழசுரண்டை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் சபரிமலைக்கு துப்புரவு பணிக்கு வந்த போது அவர் பணத்தை தெரிய வந்துது.

இதையடுத்து அவர் கீழசுரண்டையில் இருப்பது தெரியவந்ததை அடுத்து அங்கு சென்ற போலீசார் வீட்டில் இருந்த சுரேசை மடக்கி பிடித்து கைது செய்து, அவரை பம்பைக்கு அழைத்து சென்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shocking incident in ayyappan temple tenkasi youth arrested in action what happened


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->