அருணாசலேஸ்வரர் தரிசனத்தின் போது அதிர்ச்சி...! - கற்பூர தீப்பற்றி பெண் பக்தர் தீக்காயம்...! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் தினந்தோறும் உள்ளூர் மட்டுமன்றி பல மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்களை ஈர்த்து வருகிறது.

அந்த வகையில், சென்னையைச் சேர்ந்த நாராயணன் என்பவரின் மனைவி ஜெயலட்சுமி (55) நேற்று கோவிலுக்கு வந்து பக்தியுடன் தரிசனம் செய்தார்.

முன்னதாக, வழக்கம்போல் ராஜகோபுரம் முன்புள்ள தேரடி வீதியில் கற்பூரம் ஏற்றி வழிபட்டார். கிரிவலம் செல்லும் பக்தர்கள் பெரும்பாலும் பதினாறு கால் மண்டபம் எதிரில் கற்பூரம் ஏற்றி வழிபட்டு விட்டு தான் கிரிவலத்தை தொடங்குவது மரபாக இருந்து வருகிறது.

இந்நிலையில், ராஜகோபுரத்தை நோக்கி நின்று பக்தியில் மூழ்கியிருந்த ஜெயலட்சுமியின் சேலையில் திடீரென கற்பூர தீப்பற்றி எரிவதால் பரபரப்பு நிலவியது.

அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பக்தர்கள் உடனடியாக அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர், மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு மாற்றி அனுப்பப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக திருவண்ணாமலை டவுன் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த எதிர்பாராத விபத்து அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shock during Arunachaleswarar darshan Female devotee burns camphor fire


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->