இன்றைய நாள் சிறப்பாக அமைய.. ராசிபலன்கள்..!! - Seithipunal
Seithipunal


மேஷம்:

வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது மேன்மையை தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். மனதில் போட்டிகள் பற்றிய கவலைகள் தோன்றும். பணிச்சுமை காரணமாக திடீர் கோபம் ஏற்படலாம்.

ரிஷபம்:

பிள்ளைகளின் எதிர்கால நலனில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் விரிவாக்கம் தொடர்பான முயற்சியில் ஈடுபடுவீர்கள். நெருக்கமானவர்களால் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களின் மூலம் வருமானம் அதிகரிக்கும்.

மிதுனம்:

நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த சில வாய்ப்புகள் சாதகமாக அமையும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். மக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் மேம்படும்.

கடகம்:

மாணவர்களுக்கு ஆசிரியர்களின் வழிகாட்டுதல்கள் கிடைக்கும். புத்திக்கூர்மையும், வாக்குவன்மையும் அதிகரிக்கும். தொழில் சம்பந்தமான புதிய ஆர்டர்கள் கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும்.

சிம்மம்:

எந்தவொரு சூழ்நிலையையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் உங்களின் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தேவையான பண உதவிகள் கிடைக்கும்.

கன்னி:

அக்கம்-பக்கத்து வீட்டாரின் ஆதரவு கிடைக்கும். எந்தவொரு வேலையையும் மனதிருப்தியுடன் செய்வீர்கள். மற்றவர்களின் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் பாடங்களில் கவனம் செலுத்தி படிப்பது அவசியமாகும்.

துலாம்:

வாக்குவாதத்தை தவிர்ப்பதன் மூலம் நன்மை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே திடீர் மனவருத்தங்கள் ஏற்பட்டு நீங்கும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். திருமணம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான சூழல் உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.

விருச்சகம்:

அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு வெளியூர் தொடர்பான பயணங்களை மேற்கொள்வதற்கான சூழல் உண்டாகும். அமைதியான செயல்பாடுகளால் எண்ணிய சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். மனதிற்கு பிடித்த சுவையான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.

தனுசு:

தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். மாணவர்களுக்கு உத்வேகமான சிந்தனைகள் தோன்றும்.

மகரம்:

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்விற்கான முயற்சிகள் ஈடேறும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களின் வருகை உண்டாகும். சில செயல்பாடுகளில் பிடிவாதத்தை தவிர்ப்பது நன்மையை தரும்.

கும்பம்:

அலைச்சல்களின் மூலம் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாத நிலை ஏற்படலாம். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு அவசியம். வாடிக்கையாளர்களிடம் பேசும்போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழில் முன்னேற்றம் தொடர்பான கவலைகள் ஏற்பட்டு நீங்கும்.

மீனம்:

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உறவினர்களுக்கிடையே மதிப்பும், மரியாதையும் உயரும். குடும்பத்தினருடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். பெண்களுக்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த பிரச்சனைகள் தீரும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sep 19 rasi palan


கருத்துக் கணிப்பு

மழையால் சென்னை தொடர்ந்து பாதிக்கப்பட யாருடைய ஆட்சி காரணம்?
கருத்துக் கணிப்பு

மழையால் சென்னை தொடர்ந்து பாதிக்கப்பட யாருடைய ஆட்சி காரணம்?
Seithipunal