ரிஷப லக்னக்காரர்களுக்கு சூரிய திசை நடந்தால் உண்டாகும் பலன்கள்.!
Rishaba laknam surya dhisa
ரிஷப லக்னத்தின் அதிபதி சுக்கிர பகவான் ஆவார். சுக்கிர பகவானுக்கு சூரியன் பகை என்ற போதிலும் அவர் சூரியன் பெற்ற அதியப்பத்தின் அடிப்படையில் செய்யும் சுப மற்றும் அசுப பலன்கள் பின்வருமாறு :
மனதிற்கு பிடித்த வகையில் சொந்த வீடுகள் அமையும்.
புதிய வாகன சேர்க்கை உண்டாகும்.
தாய் வழி சொத்துக்கள் தொடர்பான செயல்பாடுகளில் லாபம் உண்டாகும்.
மாணவர்களுக்கு கல்வியில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும்.
உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்பட்டு விலகும்.
பணிபுரியும் இடங்களில் பொறுப்புகள் அதிகரிக்கும்.
மனதில் புதிய சிந்தனைகள் உண்டாகும்.
விவசாயம் தொடர்பான காரியங்களில் எதிர்பார்த்த லாபம் காலதாமதமாக கிடைக்கும்.
ஆன்மிக பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
அரசாங்கம் தொடர்பான காரியங்களில் சிறு தடைகளுக்கு பின்பே எண்ணிய வெற்றி கிடைக்கும்.
பரிகாரம் :
அவரவர் ஜாதகத்தில் சூரியன் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் ஞாயிற்றுக்கிழமைதோறும், சூரிய ஓரையில் சிவபெருமானை வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.
மேலும், ஜென்ம ஜாதகத்தில் சுபர்கள் மற்றும் அசுபர்களின் பார்வை இருக்கும் பட்சத்தில் சுப மற்றும் அசுப பலன்கள் மாறுபட்டு நடைபெறும்.
English Summary
Rishaba laknam surya dhisa