தினம் ஒரு திருத்தலம்.. தேவாரப்பாடல் பெற்ற இரண்டாவது தலம்.. சாஸ்திரப்படி அமைக்கப்பட்ட கோயில்..!! - Seithipunal
Seithipunal


அருள்மிகு பாசுபதேஸ்வரர் திருக்கோயில் :

தினம் ஒரு திருத்தலம்... இன்று நாம் பார்க்கவிருக்கும் திருத்தலம் அருள்மிகு பாசுபதேஸ்வரர் திருக்கோயில்...

கோயில் எங்கு உள்ளது :

அருள்மிகு பாசுபதேஸ்வரர் திருக்கோயில், கடலூர் மாவட்டம், திருவேட்களம் என்னும் ஊரில் அமைந்துள்ளது.

கோயிலின் சிறப்புகள் :

தேவாரப்பாடல் பெற்ற சிவத்தலங்களில் முதலானது சிதம்பரம். இரண்டாவது திருவேட்களம்.

இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 2வது தேவாரத்தலம் ஆகும்.

சாஸ்திரப்படி கோயில் எப்படி அமைக்க வேண்டும் என்று உள்ளதோ, அதன்படி அமைக்கப்பட்ட கோயில் இதுவாகும்.

அம்மன் நல்லநாயகி நான்கு திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறாள். முன் இரண்டு கைகளில் ஒரு கையில் தாமரையும், ஒரு கையில் நீலோத்பவ மலருடனும் அருள்கிறாள். 

வேறென்ன சிறப்பு: 

மூங்கில்வனம் எனவும் இதற்கு ஒரு பெயர் உண்டு.

திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், அருணகிரி நாதர் ஆகியோரால் பாடல்பெற்ற தலம்.

அம்பிகை சன்னதியில் 4 தூண்களிலும் அர்ஜுனன் தன் ஆயுதங்களை வைத்தல், ஒரு காலில் நின்று தவம் புரிதல், இறைவன் வேடன் வடிவம் எடுத்தல், சிவனும், அர்ஜுனனும் சண்டையிடுதல் போன்ற சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

கோயிலின் சுற்றுப்பகுதியில் நர்த்தன விநாயகர், தல விநாயகர், சித்தி விநாயகர், அனுக்கிரக தட்சிணாமூர்த்தி, சூரியன், சந்திரன் ஆகியோர் உள்ளனர்.

தட்சிணாமூர்த்தியின் காலடியில் உள்ள முயலகன் இடப்பக்கம் தலை வைத்துள்ளார். சூரியனும், சந்திரனும் அருகருகே இருப்பதால் சூரிய, சந்திர கிரகணங்களின் போது இங்கு வழிபாடு செய்வது சிறப்பு.

திருவிழாக்கள் :

சித்திரை முதல் தேதி, வைகாசி விசாகம், ஆனி திருமஞ்சனம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி, மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம் போன்ற விழாக்கள் கொண்டாடப்படுகிறது.

பிரார்த்தனை :

பேச்சில் குறைபாடு உள்ளவர்கள் இங்குள்ள இறைவனை வழிபாடு செய்து இங்கு பிரசாதமாக தரப்படும் மண் உருண்டையை சாப்பிட்டால் விரைவில் பேச்சு வரும் என்பது நம்பிக்கை.

திருமணத்தடை உள்ளவர்கள் வழிபாடு செய்து பலனடைகிறார்கள்.

நேர்த்திக்கடன்கள் :

சிவனுக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றுகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

pasupatheswarar temple


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->