பச்சை கற்பூரத்தை இப்படி ஏற்றினால்... வீட்டில் கெட்ட சக்தி நெருங்கவே முடியாது.! - Seithipunal
Seithipunal


கல்லுப்பும்... பச்சை கற்பூரமும்:

வீடு என்பது வெறும் செங்கல், சிமெண்டால் ஆனது அல்ல. அந்த வீட்டில் நுழையும் போது நமக்கான நிம்மதியையும், பாதுகாப்பையும் தரக்கூடியது தான் நாம் வசிக்கக்கூடிய வீடு. வீட்டிலிருக்கும் எதிர்மறை ஆற்றல், கண்திருஷ்டி மற்றும் கெட்ட சக்தி போன்றவற்றை விரட்டியடிக்க ஆன்மிகம் ரீதியாக எத்தனையோ பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளது. சில பரிகாரங்களை முயற்சி செய்து பார்த்திருப்போம். ஆனால் அதன் மூலம் நமக்கு பலன் முழுமையாக கிடைக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் எல்லோருக்கும் பலன் தரக்கூடிய கல்லுப்பு மற்றும் பச்சை கற்பூர பரிகாரத்தை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

பரிகாரம் செய்யும் முறை :

பொதுவாகவே குடும்பத்தில் கஷ்டம் என்றால் முதலில் செய்ய வேண்டிய விஷயம் குலதெய்வ வழிபாடு. இந்த பரிகாரத்தை செய்வதற்கு முன்பு குலதெய்வ கோவிலுக்கு சென்று வாருங்கள். இல்லை என்றால் வீட்டிலேயே குலதெய்வத்தை நினைத்து குலதெய்வ படத்திற்கு முன்பு ஒரு தீபம் ஏற்றி வைத்து பூஜை செய்து வழிபடுங்கள்.

பின், ஒரு எச்சில் படாத தட்டில் கல்லுப்பை பரப்பி விட்டு அதன் மேலே ஒரு சிறிய துண்டு பச்சை கற்பூரத்தை வைத்து இறைவனை மனதார வேண்டி கற்பூரத்தை ஏற்றி விடுங்கள்.

பச்சை கற்பூரம் எரிந்து கொண்டிருக்கும் தட்டை சுட்டுக் கொள்ளாமல் அப்படியே தூக்கி கையில் பிடித்துக் கொள்ளுங்கள். இந்த கற்பூரம் எரியும்போது மனதை ஒருநிலைப்படுத்தி கொண்டு, வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல், கண் திருஷ்டி எல்லாம் விலகி செல்ல வேண்டும் என மனதை அலைபாய விடாமல் பிரார்த்தனை செய்யவும்.

அந்த பச்சை கற்பூரம் எரியும் வரை இந்த பிரார்த்தனையை செய்தால் போதும். கற்பூரம் அணிந்த பின்பு தட்டில் இருக்கும் உப்பை தண்ணீர் இருக்கும் ஜக்கில் அல்லது பக்கெட்டில் கொட்டி விடவும்.

சிறிது நேரத்தில் அந்த உப்பு கரைந்து விடும். பின்பு அந்த தண்ணீரை தொடாமல் அப்படியே வீட்டிற்கு வெளியே ஊற்றி விடுங்கள்.

வாரத்திற்கு ஒரு நாள் என தொடர்ந்து 3 வாரங்கள் இந்த பரிகாரத்தை செய்து வரவேண்டும்.

வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமையை தவிர மற்ற கிழமைகளில் இந்த பரிகாரத்தை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பரிகாரத்தை இந்த வாரம் எந்த கிழமையில் செய்கிறீர்களோ, அடுத்து இரண்டு வாரமும் அதே கிழமையில் தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

இப்படி செய்யும்போது வீட்டில் இருக்கக்கூடிய கண்ணுக்கு தெரியாத கெடுதல் நீங்கிவிடும். நீங்கள் இழந்த சந்தோஷத்தையும், நிம்மதியையும் திரும்பவும் பெறுவதற்கு இந்த பரிகாரம் உங்களுக்கு நிச்சயம் கை கொடுக்கும்.

எதிர்மறை ஆற்றலை அகற்றுவதற்கு கல்லுப்பைத் தவிர சிறந்த வேறு ஒரு பொருள் நிச்சயம் கிடையாது. கெட்ட சக்தி, கண்திருஷ்டி, எதிர்மறை ஆற்றல் போன்றவை விலகுவதற்கு இந்த பச்சை கற்பூரமும் பயன்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pachai karpooram special for negative Vibes 


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->