நவராத்திரி ஆறாம் நாள் வழிபாடு.. வீட்டில் அன்னத்தை செழிக்க வைக்கும்.. இந்திராணி பூஜை.! - Seithipunal
Seithipunal


உயர்வு தரும் ஆறாம் நாளான இந்திராணி பூஜை.!

அம்மன் வடிவம் : இந்திராணி

பூஜையின் நோக்கம் : தூம்பர லோசன வதம் புரிதல்.

இந்திராணி வடிவம் : இந்திரனின் சக்தி வடிவமாக திகழக்கூடியவள்.

மகேந்திரி என்றும் அழைக்கப்படுபவள்.

வஜ்ராயுதத்தை கொண்டு ஐராவதம் யானையில் வீற்றிருப்பவள்.

சத்ரு பயம் மற்றும் மரண பயத்தை அழிக்கக்கூடியவள்.

உயர் பதவிகளில் உள்ள இடையூறுகளை தகர்க்கக்கூடியவள்.

தென்னாட்டில் ஆறாம் நாள் வணங்கப்படும் தேவியின் அம்சம் ஜ்வாலா துர்க்கை.

பண்டாசுரன் என்ற அசுரனுடன் போர் புரிந்த போது எதிரிகள் அருகில் வராமல் தடுப்பதற்காக துர்க்கை அக்னி ஜூவாலையுடன் கூடிய மிகப்பெரியதொரு நெருப்பு வட்டத்தை அமைத்தாள்.

நெருப்பு வட்டமானது தனது படைகளை காக்கும் பொருட்டு தீப்பிழம்பாக நின்றாள்.

இதனால் துர்கா தேவி ஜ்வாலா துர்கா என்று அழைக்கப்படுகிறாள்.

அன்னைக்கு சாற்ற வேண்டிய மாலை : செம்பருத்தி

அன்னைக்கு சாற்ற வேண்டிய இலை : சந்தன இலை

அன்னைக்கு சாற்ற வேண்டிய வஸ்திர நிறம் : ஆரஞ்சு நிறம் 

அன்னையின் அலங்காரம் : பிறைசூடிய சண்டிகா தேவி அலங்காரம்

அர்ச்சனைக்கு பயன்படுத்த வேண்டிய மலர்கள் : சிவப்பு நிற மலர்கள்.

கோலம் : பருப்பு மாவு கொண்ட தேவிநாம கோலம் போட வேண்டும்.

நைவேத்தியம் : தேங்காய் சாதம்

குமாரி பூஜையில் உள்ள குழந்தையின் வயது : 7 வயது

குமாரி பூஜையால் உண்டாகும் பலன்கள் : செல்வ செழிப்பு உண்டாகும்.

பாட வேண்டிய ராகம் : நீலாம்பரி

பயன்படுத்த வேண்டிய இசைக்கருவி : பேரி

குமாரிக்கு தரவேண்டிய பிரசாதம் : வடகம் 

பலன்கள் : மனக்கவலைகள் நீங்கும், பொருட்சேர்க்கை உண்டாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Navaratri 6th day Pooja indhirani poojai


கருத்துக் கணிப்பு

மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சி அமைந்தால் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதை நம்பலாமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சி அமைந்தால் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதை நம்பலாமா?




Seithipunal
--> -->