சூரிய கிரகணம்: மேல்மலையனூரில் அங்காளம்மன் கோவில் நடை சாற்றப்படும் - கோவில் நிர்வாகம் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


இந்த வருடத்திற்கான சூரிய கிரகணம் வருகிற 25 -ந்தேதி மாலை 5.21 மணி முதல் 6.23 மணி வரை நிகழ இருக்கிறது. இதனால் பல கோவில்களில் பூஜைகளின் நேரம் மாற்றப்பட்டும், கோவில்களின் நடைகளும் சாற்றப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூரில் புகழ் பெற்ற அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் உள்ளது. இந்தக் கோவிலில் மாதந்தோறும் வரும் அமாவாசை தினங்களில் அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தமாதம் வருகிற 25 தேதியன்று வரும் அமாவாசையில் அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில் அன்று மாலை 5.21 மணி முதல் 6.23 மணி வரை சூரிய கிரகணம் நடைபெற இருப்பதால், கோவிலில் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை கோவிலின் நடை சாற்றப்பட்டு பக்தர்களுக்கும் தரிசனம் வழங்க தடை செய்யப்பட்டுள்ளது.

சூரிய கிரகணம் முடிந்தவுடன் சாந்தி பூஜை நடந்து முடிந்தவுடன் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்களுக்கும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது என்று கோவில் உதவி ஆணையர் ஜீவானந்தம் மற்றும் கோவில் அறங்காவலர் குழு தலைவர் சந்தானம் பூசாரி உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர்.   
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

melmalaiyanoor angalaman temple gate close for solar eclipse


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->