இன்றைய தினப்பலன்கள்... உங்கள் ராசிக்கு எப்படி இருக்கு? தெரிஞ்சுக்கலாம் வாங்க.!! - Seithipunal
Seithipunal


மேஷம்:

பெரியோர்களின் உபதேசங்களால் மனதில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். எதிர்பார்த்த உதவிகளால் இலாபம் மேம்படும். பொதுச் சேவையில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். ஆராய்ச்சி சம்பந்தமான பணியில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும்.

ரிஷபம்:

எதிர்காலம் சம்பந்தமான எண்ணங்கள் மேலோங்கும். கோப்புகளை கையாளுவதில் கவனம் வேண்டும். எண்ணிய காரியங்களில் சில தடங்கல்கள் உண்டாகும்.  நண்பர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். சுயதொழிலில் எதிர்பாராத வியாபாரம் உண்டாகும். வாக்குறுதிகளை தவிர்ப்பது நல்லது. 

மிதுனம்:

நண்பர்களின் மூலம் சுபச்செய்திகள் உண்டாகும். விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் சாதகமான பலன்கள் உண்டாகும். மூத்த சகோதரர்களால் அனுகூலமான சூழல் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களால் கலகலப்பான சூழல் உண்டாகும்.

கடகம்:

வழக்கு விவகாரங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய முடிவுகளை எடுப்பதில் கவனத்துடன் இருக்கவும். அயல்நாட்டு வேலைவாய்ப்புகளால் இலாபம் உண்டாகும். அரசாங்கத்தால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீண் கவலைகளால் மனம் வருந்துவீர்கள். 

சிம்மம்:

செய்தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்துவதால் உங்களின் தனித்திறமைகள் புலப்படும். பூர்வீக சொத்துக்களில் இருந்து  மகிழ்ச்சியான செய்திகள் வரும். லட்சியத்தை அடைவதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். கற்ற கலைகளால் எதிர்பார்க்காத இலாபம் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் உங்களின் மீதான  நம்பிக்கை மேம்படும்.

கன்னி:

தாய் பற்றிய கவலைகள் அதிகரிக்கும். வீண் அலைச்சல்களால் சோர்வு உண்டாகும். கொடுக்கல்-வாங்கல்களில் எச்சரிக்கை வேண்டும். வரவுக்கேற்ற செலவு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். சக ஊழியர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். 

துலாம்:

தைரியத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு கீர்த்தி பெறுவீர்கள். தன்னம்பிக்கை மேம்படும். கணவன், மனைவிக்கிடையே அன்பு மேம்படும். விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். சர்வதேச வணிகத்தில் இலாபம் உண்டாகும். 

விருச்சகம்:

அந்நியர்களால் வருமானம் மேம்படும். உயர் அதிகாரிகளிடம் உங்களை பற்றிய நம்பிக்கை மேலோங்கும். தொழிலில் வாடிக்கையாளர்களிடம் அமைதியுடன் நடந்து கொள்ளவும். உயர் அதிகாரிகளிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். பொதுக்கூட்டப் பேச்சுக்களில் ஆதரவு கிடைக்கும். 

தனுசு:

எதிர்பார்த்த உதவிகள் கைகூடிவரும். உயர் அதிகாரிகளால் சாதகமான பலன்கள் உண்டாகும். தொழில் முதலீடுகளில் பெரியோர்களின் அறிவுரைகளை கேட்கவும். நுட்பங்களை கற்பதில் ஆர்வம் உண்டாகும். 

மகரம்:

பூமிவிருத்தி உண்டாகும். நீர் நிலைய தொழில்களில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் சார்ந்த அலைச்சல்களால் மனச்சோர்வு உண்டாகும். நீண்ட நாள் செய்ய முடியாத வேலைகளை செய்து முடிப்பீர்கள். வர்த்தக பணிகளில் இலாபம் உண்டாகும். பணிகளில் உள்ள மறைமுக எதிர்ப்புகளை தைரியத்துடன் சமாளிப்பீர்கள்.

கும்பம்:

நீண்ட நாட்களாக மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். சகோதரிகளால் சுபவிரயம் உண்டாகும். பணி சம்பந்தமான எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். தொழில் முன்னேற்றத்திற்கான புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

மீனம்:

உயர் அதிகாரிகளின் உதவியால் தொழிலில் உண்டான பிரச்சனைகள் நீங்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். தனவரவில் இருந்துவந்த தடைகள் அகலும். குடும்ப உறுப்பினர்களின் வருகையால் மகிழ்ச்சி அடைவீர்கள். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

mar 26 rasipalan


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->