இந்த ராசிக்காரர்களிடம் மட்டும் கொஞ்சம் உஷாரா இருங்க.!
kumbam raasi special
கும்பம் ராசி:
ராசி மண்டலத்தில் 11வது ராசி கும்ப ராசியாகும். கும்ப ராசியின் அதிபதி சனி பகவான் ஆவார். அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3-ம் பாதங்கள் போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் கும்ப ராசியில் பிறந்தவர்கள் ஆவர்.
கும்ப ராசியின் வேறு பெயர்கள் :
குடம், சால், சாடி
நட்பு ராசிக்காரர்கள் :
மிதுனம், துலாம், தனுசு, மேஷம் ஆகிய ராசிக்காரர்கள் நட்பு ராசிக்காரர்கள் ஆவர்.
குணங்கள் :
கும்ப ராசிக்காரர்கள் புத்திசாலிகள். தங்களின் இனிமையான பேச்சால் அனைவரையும் கவர்ந்துவிடும் ஆற்றல் கொண்டவர்கள். நேர்மையானவர்கள். மன பக்குவம் கொண்டவர்கள். நியாயத்தை வெளிப்படையாக பயமின்றி பேசுபவர்கள். அமைதியான தோற்றம் கொண்டவர்கள். அன்புக்கு கட்டுப்படுபவர்கள். கொடுத்த வாக்கை நிறைவேற்றும் குணம் கொண்டவர்கள். உண்மை பேசுவதையே அதிகம் விரும்புவார்கள். தன்னிடம் பழகுபவர்களை துல்லியமாக எடை போடுவதில் சாமர்த்தியசாலிகள். எனவே, இந்த ராசிக்காரர்களிடம் பேசும் போது சற்று உஷாரா இருங்க.!
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு சமுதாயத்தில் நல்ல மதிப்பும், புகழும் பெற்று ஜொலிப்பார்கள். ஆனால் குடும்ப வாழ்வில் நிம்மதியற்ற நிலையே காணப்படும். ஏனெனில் இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு வரும் வாழ்க்கை துணையினால் செல்வ செழிப்பு ஏற்பட்டாலும், இருவருக்கும் கருத்து ஒற்றுமை என்பது குறைவாகவே இருக்கும். கும்ப ராசிக்காரர்களின் கையில் பணம் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் இவர்களிடம் சேமிக்கும் பழக்கம் குறைவாகத்தான் இருக்கும். குடும்பத்தின் மீது அதிக பாசம் கொண்டிருப்பார்கள்.
இவர்கள் படித்த படிப்பிற்கும், பார்க்கின்ற தொழிலுக்கும் சம்பந்தமில்லாத வேலைதான் பார்ப்பார்கள். சொந்த தொழில் புரிவதையே அதிகம் விரும்புவார்கள். சொந்த தொழில் செய்து மிகப் பெரும் செல்வந்தராக உயர்வார்கள். எந்த வேலையையும் மிகவும் சிறப்பாகவும், நேர்த்தியாகவும் செய்து முடிப்பார்கள். ஒருவரை மனதிற்குப் பிடித்துவிட்டால் அவர்களுக்கு அள்ளிக் கொடுப்பார்கள். பிடிக்காவிட்டால் ஒதுங்கி விடுவர். எந்த ஒரு செயலையும் திட்டமிட்டபடி செய்து முடிப்பார்கள். அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்கத்தோடு தொடர்புடையவர்களால் அதிக லாபம் பெறுவார்கள். ஆடம்பர வாழ்க்கை வாழ்வதைத்தான் அதிகம் விரும்புவார்கள். அதற்கேற்றவாறு தன்னுடைய சொந்த முயற்சியால் ஆடம்பர வாழ்க்கை வாழ தேவையான அனைத்தையும் தேடிக் கொள்வார்கள்.
அதிர்ஷ்டம் அளிப்பவை :
எண் - 5,6,8
நிறம் - வெள்ளை, நீலம்
கிழமை - வெள்ளி, சனி
கல் - நீலக்கல்
திசை - மேற்கு.