கீழ்நோக்கு நாள் : இந்நாளில் இந்த வேலைகளை செய்தால் சிறப்பாக இருக்கும்.! - Seithipunal
Seithipunal


மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சமநோக்கு நாள் இப்படியான வார்த்தைகளை தினசரி காலண்டரில் நம் கண்களில் நிச்சயம் பட்டிருக்கும். மேல்நோக்கு நாள் பற்றியும் அந்நாட்களில் நாம் செய்ய வேண்டிய செயல்களை பற்றியும் நேற்றைய பதிவில் பார்த்தோம். இன்று கீழ்நோக்கு நாள் என்றால் என்ன? இந்நாளில் என்னென்ன வேலைகளை செய்யலாம்? என்பதை பற்றி பார்ப்போம்.

கீழ்நோக்கி செய்யக்கூடிய செயல்களை கீழ்நோக்கு தினத்தில் செய்வது நன்மை அளிக்கும்.

பூமிக்கு கீழ்நோக்கி செய்யக்கூடிய செயல்களை செய்ய உகந்த நட்சத்திரங்களாக ஒரு சில நட்சத்திரங்களை நமது முன்னோர்கள் வகுத்துள்ளனர்.

இந்த கீழ்நோக்கு நட்சத்திரங்கள் அதோமுக நட்சத்திரங்கள் என்றழைக்கப்படும். 

கீழ்நோக்கு நாளுக்குரிய நட்சத்திரங்கள் :

பரணி

கிருத்திகை

ஆயில்யம்

மகம்

பூரம்

விசாகம்

மூலம்

பூராடம்

பூரட்டாதி போன்ற ஒன்பது நட்சத்திரங்களும் கீழ்நோக்கு நட்சத்திரங்கள் ஆகும்.

கீழ்நோக்கு நாளில் செய்ய வேண்டிய செயல்கள் :

குளம், கிணறு வெட்டுவதற்கு உகந்த நாள்.

போர்வெல் தோண்டுவதற்கு நல்ல நாள்.

சுரங்கம் தோண்டுவதற்கு சிறப்பான நாள்.

மண்ணிற்கு கீழ் வளரும் காய்கறிகள் மற்றும் கிழங்குகளை பயிரிடுவதற்கு ஏற்ற நாளாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kizhnokku naal


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->