கார்த்திகை தீபத்திருநாள் : எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும்? தீபம் ஏற்ற உகந்த நேரம்.!! - Seithipunal
Seithipunal


கார்த்திகை தீபத்திருநாள் ஏன் கொண்டாடப்படுகிறது?

வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் தெய்வ சக்தி அதிகரிக்கும். தீபத்தின் சுடரில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதிதேவியும் எழுந்தருளுவதாக ஐதீகம். எனவே, தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வதன் மூலம் முப்பெரும் தேவியரின் திருவருளையும் ஒருங்கே பெறலாம்.

கார்த்திகை மாதம் முழுவதும் தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும். திருக்கார்த்திகையான இன்று இல்லங்களில் வரிசையாக தீப அலங்காரம் செய்வது தீய சக்திகளை விலக்கும். வீட்டில் மகாலட்சுமி குடி கொள்வாள்.

எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும்?

வீடுகளில் 27 நட்சத்திரங்களை குறிக்கும் வகையில் 27 தீபங்கள் ஏற்றுவது சிறப்பானது. 27 தீபங்கள் ஏற்ற முடியாத பட்சத்தில், குறைந்த பட்சம் 3 தீபங்களாவது ஏற்ற வேண்டும்.

முதல் விளக்கு உங்கள் குடும்பத்திற்காகவும்,

இரண்டாவது விளக்கு உங்கள் மூதாதையர்களை வழிபடும் பொருட்டும்,

மூன்றாவது விளக்கு உங்கள் எதிர்கால சந்ததிகள் நலமுடன் வாழ வேண்டும் என்பதற்காகவும் ஏற்றப்படுகிறது.

தீபம் ஏற்ற உகந்த நேரம் :

பிரம்ம முகூர்த்தமான அதிகாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரையும்,

கார்த்திகை மகா தீப நேரம் மாலை 6 மணி என்பதால், மாலை 6 மணிக்கு ஏற்றுவது நல்லது.

விளக்கு தானாக அணையலாமா?

தீபம் ஏற்றிய பின் விளக்கு தானாக அணையக்கூடாது. விளக்கு ஏற்றிய பின் அது தானாக கருகி அணைந்து விடும். கையால் வீசியோ, வாயால் ஊதியோ விளக்கை அணைக்கக்கூடாது. பூவை பயன்படுத்தி விளக்கை குளிர்விக்க வேண்டும்.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா :

திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தீபத்திருவிழா பிரசித்தி பெற்றது. மாதந்தோறும் இந்த ஆலயத்தில் திருவிழாக்கள் நடைபெற்றாலும் கார்த்திகை மாதம் நடைபெறும் தீபத்திருவிழாவே பெரிதும் போற்றப்படுகிறது. தீபஜோதி வழிபாடானது, இருள்போன்று நம்மை சூழ்ந்து நிற்கிற தடைகளையும், இடையூறுகளையும், கிரக பாதிப்புகளால் உருவாகும் கெடுபலன்களையும் போக்கி ஒளிமயமான, வளமான வாழ்வை அருளும் என்பது நம்பிக்கை.

சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில் திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளே தீபத்திருநாளாக கொண்டாடப்படுகிறது.

மகாதீபம் :

மகாதீபம் கார்த்திகை தீபத்திருவிழா நாளின் மாலை 6 மணிக்கு அண்ணாமலை மலையின் மீது ஏற்றப்படுகிறது. மாலை நேரத்தில் பஞ்சமூர்த்திகள் தீப மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர். அவர்களை தொடர்ந்து வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே காட்சி தருகின்ற அர்த்தநாரீஸ்வரர் உற்சவ கோலம் தீபமண்டபத்திற்கு எடுத்து வரப்படுகிறது. அவர் முன்பு அகண்ட தீபம் ஏற்றப்படுகிறது. இத்தீபம் ஏற்றப்படுகின்ற அதே நேரத்தில், மலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

குறிப்பிட்ட சில நிமிடங்கள் மட்டும் காட்சியளிக்கும் அர்த்தநாரீஸ்வரை காண தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மற்ற வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு வருவது வழக்கம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

karthikai deepam special 2


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->