இன்றைய தினப்பலன்கள்... எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?... எந்த ராசிக்கு லாபம்? - Seithipunal
Seithipunal


மேஷம்:

நிர்வாகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தனவரவுகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு கீர்த்தி உண்டாகும்.

ரிஷபம்:

எதிர்காலம் தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். எதிர்பாராத பயணங்களின் மூலம் உடல் சோர்வு ஏற்பட்டு நீங்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் கவனம் வேண்டும். நீண்ட நாட்களாக தடைபட்ட செயல்களை எதிர்பாராத விதத்தில் செய்து முடிப்பீர்கள். உடனிருப்பவர்களின் மூலம் திருப்தியான சூழ்நிலைகள் காணப்படும். 

மிதுனம்:

வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதில் இருக்கும் ஆசைகளை நிறைவேற்றி கொள்வீர்கள். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் நிறைவேறும். புதிய துறைகள் பற்றிய ஆர்வமும், ஈடுபாடும் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 

கடகம்:

நிர்வாகம் தொடர்பான பணிகளில் தனித்திறமைகள் புலப்படும். உணவு சார்ந்த தொழிலில் இருப்பவர்களுக்கு இலாபம் மேம்படும். அரசு தொடர்பான காரியங்கள் எதிர்பார்த்த விதத்தில் நிறைவேறும். எதிர்பாராத பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் ரகசியங்களை பகிர்வதை தவிர்ப்பது நல்லது.

சிம்மம்:

செய்யும் செயல்களில் திருப்தியற்ற சூழ்நிலைகள் காணப்படும். உடன்பிறந்தவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வாழ்க்கைத்துணையின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தொழில் தொடர்பான செயல்பாடுகளில் பலரின் அறிமுகமும், மதிப்புகளும் அதிகரிக்கும்.

கன்னி:

தந்தைவழி உறவுகளிடம் கருத்துக்களை பரிமாறும்போது கவனம் வேண்டும். ஆராய்ச்சி தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்த்த எண்ணங்கள் காலதாமதமாக நிறைவேறும். மனதில் அஞ்ஞான எண்ணங்கள் அதிகரிக்கும். முன்யோசனை இன்றி புதிய காரியங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.

துலாம்:

உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகள் விலகும். செய்யும் முயற்சிகளின் மூலம் புதுவிதமான அனுபவமும், மனதில் மாற்றமும் உண்டாகும். தம்பதியர்களுக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும்.

விருச்சகம்:

புதிய வேலை தொடர்பான முயற்சிகளை மேற்கொள்வதற்கான சுபச்செய்திகள் கிடைக்கும். கடன் தொடர்பான உதவிகள் சாதகமாக அமையும். மூத்த சகோதரர்களிடம் தேவையற்ற கருத்துக்களை தவிர்ப்பது நல்லது. கணவன்-மனைவிக்கிடையே புரிதலும், அன்பும் மேம்படும்.

தனுசு:

மதிநுட்பமான செயல்பாடுகளின் மூலம் பாராட்டுகள் கிடைக்கும். ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகளில் விருப்பங்கள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகளும், அதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகளும் உண்டாகும். வாரிசுகளிடம் கனிவுடன் பழகவும்.

மகரம்:

கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். தொழில் தொடர்பான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். எதிர்பாராத அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றம் உண்டாகும்.

கும்பம்:

தைரியத்துடன் புதிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். சிறு தூரப் பயணங்களின் மூலம் இலாபம் மேம்படும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகளின் மூலம் முன்னேற்றம் உண்டாகும். பாகப்பிரிவினை தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். சிறு சிறு வாய்ப்புகளின் மூலம் சேமிப்புகளும், செல்வாக்கும் அதிகரிக்கும்.

மீனம்:

எதிர்பாராத அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் கிடைக்கும். வாகன மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சுயதொழில் புரிபவர்களுக்கு எதிர்பாராத வளர்ச்சியும், உதவிகளும் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வு வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jan 22 rasi palan


கருத்துக் கணிப்பு

புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் ஆட்சி கவிழ காரணம்.,Advertisement

கருத்துக் கணிப்பு

புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் ஆட்சி கவிழ காரணம்.,
Seithipunal