பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு...! பழனி முருகன் கோவில் ரோப்கார் சேவை நாளை நிறுத்தம்...!
Important announcement devotees Palani Murugan Temple ropeway service suspended tomorrow
அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடாகத் திகழும் பழனி முருகன் திருக்கோவில், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களால் நிறைந்து காணப்படும் ஆன்மிகத் தலமாக உள்ளது.
அடிவாரத்திலிருந்து மலைமேல் உள்ள கோவிலுக்கு செல்ல படிப்பாதை மற்றும் யானைப்பாதை ஆகிய பாரம்பரிய வழிகளுடன், பக்தர்களின் வசதிக்காக ரோப்கார் மற்றும் மின்இழுவை ரெயில் சேவைகளும் செயல்பட்டு வருகின்றன.

குறுகிய நேரத்தில் சிரமமின்றி கோவிலை அடைய முடிவதால், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பெரும்பாலானோர் ரோப்கார் சேவையை முதன்மையாகத் தேர்வு செய்கின்றனர்.
இந்நிலையில், பழனி ரோப்கார் சேவை முழுவதும் வானிலை சார்ந்தது என்பதால், காற்றின் வேகம் அதிகரிக்கும் சமயங்களில் பாதுகாப்பு காரணமாக சேவை நிறுத்தப்படும். மேலும், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ரோப்கார் நிலையத்தில் மாதந்தோறும் மற்றும் ஆண்டுதோறும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த பராமரிப்பு காலங்களில் ரோப்கார் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவது வழக்கமாகும்.அதன்படி, பழனி முருகன் கோவில் ரோப்கார் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், அன்று முழுவதும் ரோப்கார் சேவை இயங்காது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனால், மலைக்கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மின்இழுவை ரெயில் அல்லது படிப்பாதையை பயன்படுத்தி பயணிக்கலாம் என்றும் கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
English Summary
Important announcement devotees Palani Murugan Temple ropeway service suspended tomorrow