பழனியில் மொட்டை அடிக்க அதிக வசூல்; நிர்வாகம் மறுப்பு! - Seithipunal
Seithipunal


பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தினந்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் பெரும்பாலான பக்தர்கள் காணிக்கையாக தங்களின் தலைமுடியை செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். திருவிழா போன்ற காலங்களில் ஒரு நாளில் சுமார் 20 ஆயிரம் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துகிறார்கள்.

பழநி தேவஸ்தானம் சார்பில் முடி காணிக்கை செலுத்தும் இடங்கள் 7 இடங்களில் உள்ளன. கோவிலின் பிரகாரத்தில் முடி இறக்கும் வேலையில் 300-க்கும் கூடுதலான தொழிலாளிகள் இருக்கின்றனர்.

பழநியில் முடி காணிக்கை செலுத்துவதற்கு மக்கள் ஊழியர்களுக்கு எந்த விதமான பணமும் வழங்க தேவை இல்லை என இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது. 

இந்நிலையில் பழநியில் முடி காணிக்கை செலுத்துவதற்கான இலவச டிக்கெட் கொடுக்கப்பட்டு வருகிறது.அந்த டிக்கெட்டுகளை காண்பித்தால் மக்கள் முடி காணிக்கை செலுத்த அனுமதிக்கப்படுவார்கள்.இவற்றையெல்லாம் மீறி முடி இறக்கும் பக்தர்களிடம் சிலர் பணம் கேட்பதாக புகார் எழுந்துள்ளது.

இந்த புகார் குறித்து பழநி கோயில் நிர்வாகம் தெரிவிக்கையில், கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் பணம் எதுவும் கேட்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை மீறுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

ஆகவே முடி காணிக்கை செலுத்த வரும் பக்தர்களிடம் தொழிலாளர்கள் பணம் கேட்டால்,பக்தர்கள் தயங்காமல் கோயில் அலுவலகத்திலோ அல்லது 9489668096, 9489668082 ஆகிய எண்களிலோ புகார் செய்யலாம் என்று தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

High charges for haircutting in Pazhani temple


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->