குரு பெயர்ச்சி பலன்கள் 2021-2022 : இந்த ராசிக்காரர்களுக்கு தனவரவுகளில் இருந்துவந்த ஏற்ற, இறக்கங்கள் குறையும்.!! - Seithipunal
Seithipunal


மங்களகரமான பிலவ வருடம் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் ஐப்பசி மாதம் 27ஆம் (13.11.2021) தேதியன்று இயற்கை சுபரான குருதேவர் செவ்வாயின் நட்சத்திரமான அவிட்டம் மூன்றாம் பாத நட்சத்திரத்தில் அதாவது, சனிக்கிழமையன்று மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

மங்களகரமான பிலவ வருடம் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கார்த்திகை மாதம் 4ஆம் (20.11.2021) தேதியன்று இயற்கை சுபரான குருதேவர் செவ்வாயின் நட்சத்திரமான அவிட்டம் மூன்றாம் பாத நட்சத்திரத்தில் அதாவது, சனிக்கிழமையன்று மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

குரு பார்வை படும் ராசிகள் :

குரு தான் நின்ற ராசியிலிருந்து ஐந்தாம் பார்வையாக சகோதர ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக புத்திர ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக களத்திர ஸ்தானத்தைப் பார்வையிடுகிறார்.

தடைகளையும் வெற்றி கற்களாக மாற்றக்கூடிய மேஷ ராசி அன்பர்களே..

இந்த வருடம் குரு உங்களுடைய ராசிக்கு தொழில் ஸ்தானமான பத்தாமிடத்தில் இருந்து லாப ஸ்தானமான பதினொன்றாம் இடத்திற்கு பெயர்ச்சி அடைகின்றனர்.

பலன்கள் :

முயற்சிகளில் இருந்துவந்த தடைகளை வெற்றி கற்களாக மாற்றிக் கொள்வதற்கான தருணங்கள் உண்டாகும். மனதில் இருந்துவந்த தயக்கங்கள் குறைந்து தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

பொருளாதாரம் மற்றும் ஆரோக்கியம் :

தனவரவுகளில் இருந்துவந்த ஏற்ற, இறக்கங்கள் குறையும். சிறு சேமிப்பு மற்றும் சிறிய சீட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். செயல்பாடுகளில் சுறுசுறுப்பும், வேகமும் அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு : 

தகவல் தொடர்புத்துறைகளில் புதிய வேலைவாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகத்தில் செய்யும் முயற்சிகளுக்கு உண்டான பலன்கள் உடனடியாக கிடைக்கும்.

வியாபாரிகளுக்கு : 

தொலைபேசி மற்றும் புதிய தொழில்நுட்பம் சார்ந்த பொருட்களின் மீதான முதலீடுகள் மேம்படும். கனிம வளம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும்.

அரசியல்வாதிகளுக்கு :

வழக்கு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் ஏற்பட்டாலும் ஆதாயம் உண்டாகும்.

கலைஞர்களுக்கு : 

கலைத்துறையில் இருப்பவர்கள் திறமைகளை வெளிப்படுத்துவதன் மூலம் மகிழ்ச்சியான வாழ்க்கையையும், செல்வாக்கை மேம்படுத்துவதற்கான பொன்னான காலமும் உண்டாகும். 

பெண்களுக்கு :

மனதில் எதையும் சமாளிக்க முடியும் என்ற தைரியமும், தன்னம்பிக்கையும் பிறக்கும். மனதிற்கு பிடித்த வகையில் எதிர்பார்த்த வரன்கள் கிடைக்கும்.

மாணவர்களுக்கு : 

மாணவர்கள் கல்வி தொடர்பான பணிகளில் புத்துணர்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். புதிய மாற்றங்களின் மூலம் நல்ல மதிப்பெண்களும், புரிதலும் அதிகரிக்கும்.

நன்மைகள் :

இந்த வருட குரு பெயர்ச்சி உங்களுக்கு மனதில் தன்னம்பிக்கையும், வாழ்க்கையின் மீது ஆசையும், புதிய நபர்களின் அறிமுகத்தையும் ஏற்படுத்தக்கூடிய பொன்னான காலமாக அமையும்.

வழிபாடு :

வியாழக்கிழமைதோறும் தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்துவர மனதில் நினைத்திருந்த எண்ணங்கள் கைகூடும்.✳ மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுப்பலன்களே... அவரவர்களின் திசாபுத்தி ஏற்ப பலன்களில் மாற்றங்கள் உண்டாகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

guru peyarchi palan 2021 to 2021 for mesham


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal