இன்றைய தினப்பலன்கள்... யாருக்கு சாதகம்?... யாருக்கு லாபம்? - Seithipunal
Seithipunal


மேஷம்:

அரசு தொடர்பான காரியங்களில் இருந்துவந்த இழுபறிகள் அகலும். வாகனப் பயணங்களின் மூலம் மேன்மை உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். பத்திரம் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு லாபம் மேம்படும். உணவு சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். எதிர்ப்புகள் குறையும் நாள்.

ரிஷபம்:

வியாபாரம் தொடர்பான பணிகளில் புதுவிதமான யுக்திகளை கையாளுவீர்கள். மனதிற்கு பிடித்த ஆடை மற்றும் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். களிப்பு நிறைந்த நாள்.

மிதுனம்:

புதிய மனை வாங்குவது தொடர்பான முயற்சிகள் கைகூடும். தொழில் சார்ந்த செயல்பாடுகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். இடமாற்றம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பதன் மூலம் நன்மை ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.

கடகம்:

சிறு வியாபாரம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும்.  நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும்.  புதுவிதமான அனுபவத்தின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். உத்தியோக பணிகளில் உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு கிடைக்கும். தைரியம் மேம்படும் நாள்.

சிம்மம்:

கலை சார்ந்த பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் ரீதியான பயணங்களால் நன்மை உண்டாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சகோதரர்களால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். எதிர்பாராத தனவரவு கிடைக்கும். அறிமுகம் கிடைக்கும் நாள்.

கன்னி:

வியாபார பணிகளில் சில நுணுக்கங்களை அறிவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். சிக்கல் குறையும் நாள்.

துலாம்:

மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். நிர்வாகத் துறைகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உணவு சார்ந்த துறைகளின் மீது ஆர்வம் அதிகரிக்கும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். மனதளவில் எதிலும் திருப்தியற்ற சூழ்நிலைகள் ஏற்பட்டு நீங்கும். கற்றல் திறனில் மாற்றம் உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

விருச்சிகம்:

எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வர்த்தகம் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படுதல் நல்லது. செய்கின்ற முயற்சிக்கு ஏற்ப அங்கீகாரம் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.

தனுசு:

சொத்து வாங்குவது மற்றும் விற்பதில் கவனம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் வரலாம். முக்கிய முடிவுகளில் சிந்தித்து செயல்படவும். அரசு சார்ந்த செயல்பாடுகளில் அலைச்சல்கள் மேம்படும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். சமூகப் பணிகளில் இருப்பவர்கள் பொறுமையை கையாள வேண்டும். விரயங்களில் கவனம் வேண்டிய நாள்.

மகரம்:

தாய்மாமனின் மூலம் ஆதாயம் கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். அரசு தொடர்பான பணிகளில் ஆதாயம் கிடைக்கும். வேலையில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். கவலை குறையும் நாள்.

கும்பம்:

தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.  கற்பனை சார்ந்த துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். ஆராய்ச்சி சார்ந்த முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தடைகள் குறையும் நாள்.

மீனம்:

தம்பதிகளுக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் திறமைக்கேற்ற பாராட்டுகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் மேன்மை உண்டாகும். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மனதில் புதுவிதமான ஆசைகள் மற்றும் இலக்குகள் உண்டாகும். இன்பமான நாள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

feb 16 rasipalan


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->