ஆனந்தத்தை தரும் தீபாவளி.. ஆரோக்கியமாக இருக்கட்டும்.. உங்களுக்காக சில டிப்ஸ்..!! - Seithipunal
Seithipunal


தீபாவளி பண்டிகையை சிக்கனமாகவும், ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் கொண்டாட நாம் கடைபிடிக்க வேண்டிய சின்ன சின்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இங்கு பார்ப்போம்..!!

சிகைக்காய் :

தீபாவளியன்று நாம் தவறாமல் செய்யும் ஒரு விஷயம் எண்ணெய் குளியல். இது உடல் சூட்டை தணித்து, சருமம் வறண்டு போகாமல் பார்த்துக் கொள்ளும். எண்ணெய் குளியலின்போது சிகைக்காய் பவுடரை பயன்படுத்துவது சிறந்தது.

உடல்நலனை பாதுகாக்கும் குளிர்பானம் :

தீபாவளி பண்டிகை மழைக்காலத்தில் வருவதால் ஃப்ரிட்ஜில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை தவிர்த்துவிட்டு, அதற்கு பதில் தண்ணீரில் சீரகத்தை போட்டு கொதிக்க வைத்து, இரண்டு வால் மிளகையும் தட்டி போட்டு பனைவெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள். இது கொஞ்சம் மாறுதலான சுவை கொண்ட, உடல்நலத்தை மேம்படுத்தும் குளிர்பானம். வேண்டுமானால் ஃப்ரிட்ஜில் வைத்தும் பருகலாம்.

உடனடி டீ :

இஞ்சி, சுக்கு, ஏலக்காய் என்று தனித்தனியாக டீத்தூளுடன் சேர்த்து கொதிக்க வைத்து அந்த டிகாஷனை ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டால் தீபாவளியன்று திடீரென்று வரும் கெஸ்ட்டை வரவேற்க வசதியாக இருக்கும்.

எளிய முறையில் சுத்தம் செய்ய :

உங்கள் வீட்டு குழந்தைகள் ஸ்வீட் சாப்பிடுகிறேன் என்று ஸ்வீட்டை தரையில் கொட்டிவிட்டால், அதை சுத்தம் செய்ய டெட்டால் கலந்த தண்ணீர் மற்றும் ஸ்பான்ஞ்சை ரெடியாக வைத்துக் கொண்டால் துடைக்க வசதியாக இருக்கும்.

உங்களுக்கு பல பயனுள்ள தகவல்களை கொடுக்க முயற்சித்து கொண்டிருக்கும் நித்ரா நாட்காட்டி, மக்களிடையே பிரபலம் அடைய முக்கிய காரணம் நீங்களும் தான். நித்ரா நாட்காட்டியின் முயற்சி குன்றாமல் இருக்க நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்.

பருத்தி ஆடை :

குந்தைகள் மற்றும் பெரியவர் என அனைவரும் பட்டாசு வெடிக்கும்போது பருத்தியால் ஆன உடைகளை அணிந்துகொள்வது நல்லது.

ஆடம்பர பொருட்களை தவிர்ப்போம் :

பெண் குழந்தைகள் பட்டாசு வெடிக்கும்போது அவர்களின் முடியை இருக கட்டிவிடவும். பண்டிகைக்காலத்தில் குழந்தைகளுக்கு விலை உயர்ந்த தங்க நகைகளை அணிவிப்பதை தவிர்க்கவும். அதற்கு பதில் உடைகளுக்கு பொருத்தமான ஃபேஷன் நகைகளை அணிவித்து குழந்தைகளை அழகுப்படுத்தவும்.

குழந்தைகளுடன் இருங்கள் :

குழந்தைகள் பட்டாசுகள் வெடிக்கும்போது பெரியவர்கள் கண்டிப்பாக கூடவே இருங்கள். குழந்தைகள் பெரிய வெடிகள் அல்லது புஸ்வானங்கள் பற்ற வைக்கும்போது அது உடனே வெடிக்கும் அபாயம் உள்ளது. எனவே, குழந்தைகள் பட்டாசு வெடிக்கும்போது அதிக கவனத்துடன் இருக்கவும்.

பட்டாசுகளை பாதுகாப்பாக வையுங்கள் :

எந்தவகை பட்டாசாக இருந்தாலும் எரிந்து கொண்டிருக்கும் மெழுகுவர்த்தி, ஊதுவத்தி ஆகியவற்றின் அருகில் வைக்காமல் தள்ளியே வையுங்கள். எந்தவொரு பட்டாசையும் நீள ஊதுபத்தி கொண்டு பற்ற வைப்பதே பாதுகாப்பானது. ஒரு வாளி நிறைய மணல் வைத்துக்கொண்டு, அதில் கம்பி மத்தாப்பு கொளுத்தியவுடன் கம்பிகளை போட சொல்லுங்கள்.

பாதங்களை பத்திரப்படுத்துங்கள் :

பெரியோர் முதல் சிறியோர் வரை பட்டாசு வெடிக்கும்போது காலணிகளை அணிந்து கொள்வது சிறந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

diwali 2020 special 2


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->